(Reading time: 2 - 4 minutes)

ஜோக்ஸ் - இவர் அவனா ? :-) - அனுஷா

fun

ப்போவாவது உங்க வயசலவில இருக்கவங்களை பார்த்து நான் இவ்வளோ வயசானவளா தெரியலைன்னு யோசிச்சிருக்கீங்களா?

அப்போ இது உங்களுக்கு தான்...

ரு புது பல் டாக்டரை பார்க்க அவர் கிளினிக்ல காத்துக்கிட்டிருந்தேன்.

அவர் பெயர் போட்ட பி.டிஎஸ் டிகிரியை அங்கே மாட்டி வச்சிருந்தார்...

சட்டென அதே பேருல 25 வருடத்துக்கு முன் என்னோட ஹையர் செகன்டரி ஸ்கூல்ல படிச்ச உயரமான, ஸ்மார்ட்டான க்ளாஸ்மேட் ஞாபகம் வந்தது.

அந்த சின்ன வயசுல என்னோட ரகசிய க்ரஷா இருந்த அதே ஆளா இருப்பாரா இவர்?

ஆனால் அவரை பார்த்த உடனே இவர் அவன் இல்லைன்னு முடிவுக்கு வந்துட்டேன்.

வழுக்கையோட, தலை நரைச்சு, முகம் எல்லாம் சுருங்கி போயிருக்க இவர் எப்படி என்னோட கிளாஸ்மேட்டாக இருக்க முடியும்? இவருக்கு ரொம்ப வயசான மாதிரி தெரியுதே!

என் பல்லை அவர் செக் செய்து முடிச்ச பிறகு, என் ஸ்கூல் பேரை சொல்லி, நீங்க அங்கே படிச்சீங்களான்னு கேட்டேன்.

“ஆமாம், நான் அங்கே தான் படிச்சேன்” என பெருமையுடன் சொன்னார் அவர்.

“எப்போ படிச்சு முடிச்சீங்க?”

“1992ல. ஏன் கேட்குறீங்க?”

“நீங்களும் என் கிளாஸா!!” நம்பவே முடியாமல் கேட்டேன்.

அவர் என்னை உற்று பார்த்தார்... பின்,

அந்த

அசிங்கமான,

வயதான,

வழுக்கை விழுந்த,

முகம் எல்லாம் சுருக்கம் இருக்கும்,

முடி நரைத்த,

தள்ளாத வயதான,

முட்டாள்,

கேட்டார்,

“எந்த சப்ஜெக்ட் டீச் செய்தீங்க????”

 

tongue-outtongue-outtongue-out

laughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.