(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - மாணவனின் சந்தேகம்! :-) - அனுஷா

fun

மாணவன் இங்க்லீஷ் டீச்சரிடம் – சார் எனக்கு ஒரு சந்தேகம்

 

டீச்சர் – சொல்லுப்பா

 

மாணவன் – நடுரே ன்னா என்ன சார்?

 

டீச்சர் அப்படி ஒரு வார்த்தையை கேள்வி பட்டதே இல்லை.

அதை மாணவனிடம் சொல்ல, முடியுமா?

எனவே கிளாஸ் இருக்கு அப்புறம் சொல்றேன் என சொல்லி சமாளித்தார்.

 

வீட்டிற்கு போய் டிக்ஷனரியில், இன்டர்நெட்டில் என எல்லா இடத்திலும் தேடி தேடி ஓய்ந்து போனார். எங்கேயும் அப்படி ஒரு வார்த்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

 

அந்த மாணவனோ அவரை பார்க்கும் போதெல்லாம் சொல்லுங்க சார் என சொல்லி சொல்லி தொலைத்து எடுத்தான்.

 

“சரி சொல்றேன், அந்த வார்த்தையோட ஸ்பெல்லிங்கை சொல்லு”

 

மாணவன் – “N A T U R E”

கடுப்பாகி போன டீச்சர்,

“நேச்சர்ன்னு சொல்லாம என்னை தொல்லை செய்திட்டீயேடா!” உன்னை ஸ்கூல் விட்டே அனுப்புறேன் இரு, இரு” என கோபத்துடன் கத்தினார்.

 

மாணவன் டீச்சர் காலில் விழுந்து அழுதான்.

 

“சார் அப்படி எல்லாம் செய்திராதீங்க என்னோட புடுரே (FUTURE) வீணாகிடும்”

 

!@#$%^&*()

 

laughinglaughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.