(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Latest - Tamil Jokes - மனைவி, மனைவி தான்! 🙂 - அனுஷா

ரு தம்பதிகள் தோட்டத்தின் வழியாக நடந்து கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு நாய் அவர்களை நோக்கி ஓடி வந்தது.

 

அது கடிக்கப் போகிறது என்று இரண்டுப் பேருக்கும் புரிந்தது.

  

தன் காதல் மனைவியை நாய் கடித்து விடக் கூடாது என்று கணவன் மனைவியை கையில் தூக்கினான்.

  

என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் முன்னே நின்ற நாய், சிறிது வினாடிகள் குரைத்து விட்டு ஓடியது.

  

கணவன் தன் மனைவியைக் கீழே இறக்கி நிறுத்தினான்.

  

மனைவி நன்றி சொல்லப் போகிறாள், புகழப் போகிறாள், முத்தம் கூட கொடுப்பாள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தான்.

  

அவன் மனைவியோ, “நாய் மேல கல்லு, கொம்பு தூக்கிப் போடுறவங்களை பார்த்திருக்கிறேன். இப்படி சொந்த மனைவியை தூக்கி வீசுற ஆளை இப்போ தான் முதல் தடவை பார்க்கிறேன்" என்று கத்தினாள்.

 

கருத்து:

"ஒரு கணவனை மனைவியை விட வேறு யாரும் தவறாக புரிந்து கொள்ள முடியாது."

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.