(Reading time: 1 - 2 minutes)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - மனைவின்னா சும்மாவா... 🙂 - அனுஷா

   

மெர்சிடிஸ் பென்ஸ் கார் விற்பனை @ ரூபாய் 1

  

இந்த விளம்பரத்தை யாரோ போட்டார்கள்.

  

இது உண்மையாக இருக்கும் என்று யாரும் நம்பவில்லை. அதனால் யாரும் பதிலளிக்கவில்லை. ஆனால் ஒரு முதியவர் மட்டும் பதிலளித்து காரைப் பார்க்கச் சென்றார்.

  

அந்த பெண்மணி உண்மையாகவே 12,000 கிமீ தூரம் மட்டும் ஓடிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை 1 ரூபாய்க்கு பெரியவருக்கு விற்றாள்.

  

உடனே டாகுமென்ட், கார் சாவியையும் அவரிடம் கொடுத்தாள்.

  

ஒரே நிமிடத்தில் ஒப்பந்தம் முடிந்தது.

  

முதியவர் புறப்படும்போது, "இந்த காரை ஏன் இவ்வளவு குறைந்த விலைக்கு விற்றீங்கன்னு நீங்க என்னிடம் சொல்லாவிட்டால் நான் சஸ்பென்ஸில் இறந்தே விடுவேன்," என்றார்.

  

அதற்கு அந்த பெண்மணி, "இறந்த எனது கணவரின் விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன். அவர் அவரோட உயிலில் இந்த மெர்சிடிஸ் காரை விற்று வரும் பணத்தை அவரோட லேடி செக்ரட்டரிக்கு கொடுக்க சொல்லி இருந்தார்..." என்று பதிலளித்தார்.

  

மனைவின்னா சும்மாவா...🤣🤣🤣

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.