(Reading time: 2 - 3 minutes)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - மனைவியா? சின்னவீடா? 🙂 - அனுஷா

   

ஒரு கட்டிடக் கலைஞர், ஒரு ஓவியர், ஒரு பொறியாளர் மூணுப் பேரும் மனைவி கூட நேரம் செலவு செய்வது பெஸ்ட்டா, இல்ல சின்ன வீடு கூட நேரத்தை செலவிடுவது பெஸ்ட்டான்னு விவாதம் செய்துட்டு இருந்தாங்க.

  

கட்டிடக் கலைஞர் மனைவி தான் பெஸ்ட்ன்னு சொன்னார். மனைவியோட நிறைய நேரம் செலவு செய்தா நீண்ட உறவுக்கு உறுதியான அடித்தளம் உருவாகும்னு அவர் சொன்னார்.

   

ஓவியர் சின்ன வீடு கூட நேரம் செலவு செய்றது தான் பெஸ்ட்ன்னு சொன்னார். ஏன்னா அங்கே தான் ஆர்வமும், மர்மமும் கலந்திருக்குன்னு அவர் சொன்னார்.

   

பொறியாளர், “எனக்கு இரண்டும் பிடிக்கும்ன்னு சொன்னார்!

   

"இரண்டுமா?" கட்டிடக் கலைஞரும், ஓவியரும் ஒருமித்த குரலில் கேட்டார்கள்.

   

அதுக்கு பொறியாளர் சொன்னார், "ஆமாம். மனைவி, சின்ன வீடு இரண்டும் இருந்தா, நீங்க மத்தவளோட நேரத்தை செலவு செய்றீங்கன்னு இரண்டுப் பேரும் நினைச்சுப்பாங்க. அதனால நீங்க ஆபீஸ் போய் நிம்மதியா வேலை செய்யலாம்!".

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.