Husband & Wife Jokes - Chillzee Team

ஒரு பெண் ஷாப்பிங் போனார் ..!!
கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு ஆச்சரியம் ..!!
நீங்க டி.வி ரிமோட்டை எப்பவுமே உங்க பையிலதான் வச்சிருப்பீங்களா ..?!?என்று கேட்டார்
அதற்கு அந்தப் பெண்
இல்லை இல்லை என் கூட ஷாப்பிங் வரமாட்டேன்னு என் ஹஸ்பண்ட் சொல்லிடாரு அதான் அவர் டி.வி பார்க்காம இருக்கறதுக்காக ரிமோட்டை கையோட தூக்கிட்டு வந்துட்டன் என்றாள் ..!!
கருத்து
மனைவி எங்கே கூப்பிட்டாலும் செல்ல மறுக்காதீர்கள் ..!!
இதைக்கேட்டு கடைக்காரர் சிரித்தபடி அந்த பெண் வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே வைத்தார் ..!!
என்னாச்சு என்று ஆச்சரியத்தோடு அந்த பெண் கேட்டார் ..அதற்கு அந்த கடைக்காரர் சொன்னார் உங்க கிரடிட் கார்டை உங்க ஹஸ்பண்ட் பிளாக் பண்ணிருக்கார் என்று ..!!
கருத்து
உங்கள் கணவரின் ஆசைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ..!!
அந்த பெண் உடனே தன் பையிலிருந்து தனது கணவனின் கிரடிட் கார்டை எடுத்து நீட்டினார் ..!!
அது பிளாக் செய்யப்படாமலிருந்தது
இப்போது அந்த பெண் கடைக்காரரைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்தார் ..!!
கருத்து
மனைவியின் பவரை குறைத்து மதிப்பிடாதீர்கள் ..!!
அந்த கிரடிட் கார்டை ஸ்வைப் செய்தவுடன் ..ஒன் டைம் பாஸ்வேர்டை என்டர் செய்யவும் .. அது உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்று மெஷின் ஒளிர்ந்தது ..!!
கருத்து
ஆண்கள் சமத்தாக இருந்தாலும் கூட மெஷின்கள் அவர்களை சாமர்த்தியமாக காப்பாற்றும் ..!!
அந்த பெண் பொருட்கள் எதுவும் வாங்காமல் மனம் நொந்து போய் கடையிலிருந்து வெளியே வந்தார் ..!!
அப்போது அவளுடைய மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது அது ஒரு ஃபார்வர்டு மெஸேஜ் அதில் #உங்கள்_ஒன்_டைம்_பாஸ்வேர்டு என்றிருந்தது ..அது அவளுடைய கணவர் அனுப்பியது ..உடனே அவள் முகம்மலர்ந்தது ..!!
ஆனால், அவள் கண்களில் கண்ணீர் மட்டும் தேங்கி நின்றது..!!
மீண்டும் கடைக்குள் நுழைந்தவள் வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்கினாள் ..!!
கருத்து
உங்கள் கணவரைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள் ..!! ஆனால் அவர்கள் எப்போதும் தன் மனைவிக்காக தியாகம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள் இருப்பார்கள் ..!!
சில்சீ டீம் - இதை ஏன் காமெடின்னு இங்கே பதிவு செய்திருக்கீங்கன்னு யாரும் கேட்க மாட்டீங்கன்னு நம்புறோம் ![]()
மனைவி : அத்தான்.... சிவன் - பார்வதி உள்ள புகைப் படத்தில், சிவனின் கையில் திரிசூலம் உள்ளது,
விஷ்ணு- லக்ஷ்மி உள்ள புகைப் படத்தில், விஷ்ணுவின் கையில் சக்கரம் உள்ளது,
ராமர் சீதை உள்ள புகைப் படத்தில் ராமரின் கையில் வில் உள்ளது.
ஆனால் கிருஷ்ணன் ராதை உள்ள படத்தில் புல்லாங்குழல் உள்ளது, ஏன்? என்றாள்.
கணவன் : அன்பே.. நீ குறிப்பிட்ட முதல் மூன்று தெய்வங்களும் மனைவிகளுடன் இருக்கிறார்கள். எனவே அவர்கள் ஆயுதத்துடன் இருக்கிறார்கள். கிருஷ்ணர் காதலியுடன் இருக்கிறார் எனவே ஆயுதம் தேவை படவில்லை. இதன் மூலம் தெரிய வரும் கருத்து என்னவென்றால், தெய்வமே ஆனாலும் மனைவியுடன் இருக்கும் போது பாதுகாப்பிற்கு ஆயுதம் அவசியம்.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.