(Reading time: 1 - 2 minutes)

Jokes - Chillzee Team 

fun 

பீஸ்லருந்து கிளம்பும் போது வீட்டம்மாகிட்ட இருந்து போன். இன்னைக்கு என்ன தேதி?

செப்டம்பர் 6. ஏன் என்ன விஷயம்னு கேக்கறதுக்குள்ள லைன் கட் பண்ணிட்டாங்க!

மண்டைக்குள்ள ஒரே கொடைச்சல்! எத மறந்துட்டோம்? யாருக்கும் பர்த் டே இல்ல, கல்யாண நாள் இல்ல, அம்மா, அப்பா, மாமனார் நினைவு நாளும் இல்ல, ஈ பி பில்லும் இந்த மாசம் வராது, கேஸ் புக் பண்ணியாச்சி, ஈ எம் ஐ, க்ரெடிட் கார்டு பேமெண்ட் கட்டியாச்சு.

அரைமணி நேரமா குழம்பி ஒருவித பயத்தோட(பதட்டம்னு பொய் சொல்ல விரும்பல) வீட்டம்மாவுக்கு போன் பண்ணேன்! என் சின்னப் பையன் எடுத்தான்! அம்மா எங்கடா?

கிச்சன்ல இருக்குப்பா!

கோவமா இருக்காங்களா?

இல்லப்பா!

ஸ்வீட், பாயாசம் எதாச்சும் செய்யுறாங்களா?

இல்லையே! ஏம்பா இதெல்லாம் கேக்குற?

திடீர்னு அம்மா இன்னைக்கு என்ன தேதின்னு கேட்டுச்சிடா!

அய்யோ அப்பா! என் ஹோம் ஒர்க் டைரி செக் பண்ணாங்க! அதனால டேட் கேட்டாங்க! போனை வைப்பா!

ச்சை! அரைமணி நேரத்துல சுகர் பிபி ஹார்ட் பீட் எல்லாமே ஏகத்துக்கு எகிறிடுச்சி! என்னா வாழ்க்கைடா இது?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.