(Reading time: 1 - 2 minutes)

Jokes - Devi

fun 

ப்ரியா:- என்னடி சொல்ற? சமையல் தெரியலங்கற ஒரே காரணத்திற்காக உனக்கு அமைய இருநத நல்ல சம்பந்தம் அமையாம போச்சா? நீங்க கொஞ்சம் அவகாசம் கேட்டு இருக்கலாமே...!

நிஷா:- மூணு மாச அவகாசம் சொல்லி பாா்த்தோம்!

ப்ரியா:- அவங்க அதுக்கு ஒத்துக்கலையா...?

நிஷா:- மூணு மாசம் என்ன மூணு வருஷம் ஆனாலும் எங்க பையன் சமைக்க மாட்டான்... உங்க பொண்ணுதான் சமைக்கணும், நான் பட்ட கஷ்டம் என்னோடயே போகட்டுமுன்னு பையனோட அப்பா கறாரா சொல்லிட்டாா்...!

ப்ரியா:- ??????????????

 


சிரியர் : பிள்ளைகளே.. இன்னைக்கு கணக்குப் பாடம்.. 1,2,3 கத்துத் தரப்போறேன்..

சிறுவன் : எனக்கு தெரியும் சார்.. எங்கப்பா கத்துக் குடுத்திருக்காங்க..!

ஆசிரியர் : வெரி குட்.. 3 க்கு அப்புறம் என்ன சொல்லு..?

சிறுவன் : 4 சார்.

ஆசிரியர் : 8 க்கு முன் என்ன வரும்..?

சிறுவன் : 7 சார்.. எங்கப்பா கத்துக் கொடுத்திருக்காங்க..!

ஆசிரியர் : எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே.. 10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்..

சிறுவன் : ஜாக், குயின், கிங், ஆஸ்..

 

 ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.