(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - மனைவியின் அருமை!!!! - அனுஷா

fun

ர்யபட்டா ஜீரோவை எப்படி கண்டுபிடிச்சிருப்பார்ன்னு யோசிச்சிருக்கீங்களா???

நான் சொல்றேன் கேளுங்க...

மேத்ஸ் புலி ஆர்யபட்டாவிற்கு திடீர்னு ஒரு ஆசை வந்துச்சு. மாசத்துல ஒரே ஒரு நாள் ப்ரீயா போய் பிரென்ட்ஸ் கூட என்ஜாய் செய்தா எப்படி இருக்கும்னு ஒரு ஆசை!

அவரும் போய் அவரோட மனைவி கிட்ட கேட்டார்,

“மாசத்துல ஒரே ஒரு நான் நான் என் பிரென்ட்ஸ் கூட போய் ஜாலியா என்ஜாய் செய்யட்டுமா?”

ஆர்யபட்டாவோட மனைவியும் புத்திசாலி!

கணவரோட அருமை பெருமை தெரிஞ்சவங்க என்பதால,

“நீங்க பெரிய மேத்ஸ் ஜீனியஸ் ஆச்சே... உங்க கேள்விக்கு நான் சரின்னு பதில் சொல்ல ப்ராபபிலிட்டி எவ்வளவுன்னு கணக்கு போட்டு சொல்லுங்க பார்ப்போம்ன்னு” கேட்டாங்க...

ஆர்யபட்டாவும் மனசுக்குள்ள கணக்கு போட ஆரம்பிச்சார்....!

அப்போ தான் ‘ஜீரோ’ அவருக்கு ப்ளாஷ் ஆச்சு...!

இன்னைக்கு வரைக்கும் அவருடைய புகழ் நிலைத்திருக்கு!!!!

இப்போ தெரியுதா மனைவியின் அருமை!!!!

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.