(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - என்ன ஒரு காதல் கதை :-) - அனுஷா

funருத்தர் ஒரு பொண்ணு மேல உயிரையே வச்சிருந்தார். லவ்வுன்னா லவ்வு, அப்படி ஒரு லவ்வு.

ஆனால் அதை அந்த பொண்ணுக் கிட்ட நேரா சொல்ல மட்டும் அவருக்கு தைரியம் வரவே இல்லை.

ஒரு நாள் ராத்திரி பத்து மணிக்கு எப்படியோ தைரியத்தை வரவழைச்சிட்டு ஒரு மெசேஜை அந்த பொண்ணுக்கு அனுப்பினார்...

"டியர், ஐ லவ் யூ... ப்ளீஸ் ரிப்ளை செய்து நீயும் என்னை லவ் செய்றீயான்னு சொல்லு..."

மெசேஜ் அனுப்பின ஒரு சில வினாடிகளிலேயே அவர் ஃபோனுக்கு புது மெசேஜ் வந்த சத்தம் கேட்டது!

அவர் ரொம்ப டென்ஷன் ஆகிட்டார். என்ன ரிப்ளை வந்திருக்கும்னு படிக்க பயமா இருந்தது.

சரி இப்போ படிக்க வேண்டாம், காலையில கொஞ்சம் டென்ஷன் குறைஞ்ச பிறகு படிக்கலாம்னு முடிவு செய்தார்.

தூங்க படுத்தார்.... தூக்கமே வரலை...

எப்படியோ ராத்திரி ஓடி போச்சு....

காலையில எழுந்த உடனேயே சாமியை கும்பிட்டார். நல்ல பதிலா இருக்கனும் சாமின்னு மனமுருக வேண்டினார்...

அப்புறம் பல் விளக்கிட்டு, குளிச்சு, சாப்பிட்டுட்டு, தடக் தடக்குன்னு அடிக்கும் மனசோட போனை கையில எடுத்து அந்த மெசேஜை படிச்சார்....

அந்த மெசேஜ் என்னன்னா,

"Dear customer you have insufficient balance to send this message. Please recharge your account and try again".

sealedinnocentcry

 

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.