(Reading time: 2 - 4 minutes)

ஜோக்ஸ் - முத்தமிட்டு எடை குறைக்கும் திட்டம் :-) - அனுஷா

fun

குண்டான மனிதன் ஒருவன் பத்திரிகையில் கீழ்கண்ட விளம்பரத்தை பார்த்தான்.....

"ஒரு வாரத்தில் 5 கிலோ எடை குறையுங்கள்"

உடனே அவன் அந்த நிறுவனத்தை தொடர்புக்கொள்ள, அவனின் அழைப்பை ஏற்ற பெண்மணி, அவனின் விபரங்களை பெற்றுக் கொண்டு “நாளை காலை ஆறு மணிக்கு ரெடியா இருங்க” என்றாள்.

டுத்த நாள் காலை 6 மணிக்கு அவன் கதவை திறக்க, அங்கே ஸ்கர்ட் அணிந்த அழகிய பெண் ஒருத்தி நின்றாள்.

“ஓடி பிடிச்சு விளையாடுவோமா? என்னை நீ பிடிச்சா, நீ எனக்கு முத்தம் தரலாம்...” என்றவள், அவன் மேலே பேசும் முன் வேகமாக ஓட தொடங்கினாள்.

அவனும் அவளை பிடிக்க வேகமாக ஓடினான் ஆனால் அவனால் அவளை பிடிக்க முடியவில்லை.

அந்த முழு வாரமும் இதே நடக்க, ஒரு நாளும் அவனால் அவளை பிடிக்க முடியவில்லை ஆனால் 5 கிலோ எடை மட்டும் குறைந்தது.

டுத்ததாக அவன் 10kg திட்டம் கேட்கிறான்.

மறு நாள் காலை 6 மணிக்கு கதவை திறந்தால், முன்பு வந்த பெண்ணை விடவும் அழகான ஸ்கர்ட் அணிந்த பெண் ஒருத்தி,

“ஓடி பிடிச்சு விளையாடுவோமா? என்னை நீ பிடிச்சா, நீ எனக்கு முத்தம் தரலாம்...” என்கிறாள்.

அந்த வாரத்தில் அவனின் கிலோ 10 கிலோ குறைகிறது!!!!

ந்த எடை குறைப்பு திட்டம் அருமையாக இருக்கிறதே என யோசிக்கும் அவன், 25 கிலோ குறைய முயற்சி செய்வது என முடிவெடுக்கிறான்.

எனவே மீண்டும் அந்த நிறுவனத்தை தொடர்புக் கொண்டு 25 கிலோ எடை குறைப்பு பற்றி கேட்கிறான்.

“நல்லா யோசிச்சு சொல்றீங்களா? 25 கிலோ ரொம்ப கஷ்டம்” என்கிறாள் அந்த பெண்மணி.

“ஒரு கஷ்டமும் இல்லைங்க, நீங்க ஸ்டார்ட் செய்ங்க” என்கிறான் அவன்.

அடுத்த நாளை காலை 6 மணிக்கு கதவை திறந்தால்.....

அங்கே....

பார்க்க சகிக்க முடியாத ஒரு ஆள் நிற்கிறான்...

“ஓடி பிடிச்சு விளையாடுவோமா? நான் உன்னை பிடிச்சா உன்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடுப்பேன்...” னு அவன் சொல்லி முடிக்குறதுக்குள்ளே இவன் எடுத்தான் பாருங்க ஒரு ஓட்டம்!!!!

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.