(Reading time: 4 - 8 minutes)

01. கீதம் சங்கீதம்.... - தேவி

Geetham sangeetham

 

ஹாய்.. எல்லோருக்கும் வணக்கம் ..

நம்ம chillzee லே நிறைய இசை பிரியர்கள் இருக்கீங்க... அத அடிப்படையா கொண்டு நான் நம்ம கர்நாடக சங்கீதம் பாடல்கள் பற்றி ஒரு சின்ன தொடர் எழுதலாம் ஆசைபடறேன்..

நான் முறைப்படி சங்கீதம் கத்துக்கிட்டது கிடையாது. ஆனால் நிறைய பாட்டுக்கள் கேட்பேன். அதன் அடிப்படையில் தான் இத எழுதறேன்... எதாவது தவறு இருந்தால் சுட்டி காட்டுங்க.. திருத்துங்க...

இதுலே நான் பகிர்ந்துக்கிறது எனக்கு பிடித்த பாடல்கள் தான். அது சம்பந்தபட்ட எனக்கு தெரிஞ்ச தகவல்கள். அதோட அந்த பாட்டு நான் எந்த குரலில் கேட்டு ரசித்தேனோ அதை பற்றி மட்டும் தான் பேசறேன்.

இந்த முதல் அத்தியாயமே.. நம்ம.. எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா வோட

“குறை ஒன்றும் இல்லை “ பாட்டு பற்றி தான்.

எத்தனையோ பாட்டுக்கள் நாம் கேட்டாலும், ரசித்தாலும் இந்த பாடல் மாதிரி மற்றும் ஒரு பாடல் அந்த வெங்கடேச பெருமாளே நினைச்சாலும் அவருக்கே கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியால் எழுதப்பட்ட ஒரே ஒரு பாடல் இதுவாகும். தமிழறிஞர் மீ.ப. சோமசுந்தரம் (மீ.ப.சோமு) அவர்களின் உதவியுடன் இயற்றப்பட்ட இந்தப் பாடல் 1967-இல் ‘கல்கி’ பத்திரிகையில் வெளிவந்தது. இந்தப் பாடலுக்கு இசை வடிவம் தந்தவர் கடையநல்லூர் வெங்கட்ராமன் ஆவார். மறைந்த இசை மேதை  பாரத ரத்னா  எம். எஸ். சுப்புலட்சுமியால் 1979/80 -இல் முதலில் பாடப்பட்ட இப்பாடல், பிறகு இசையுலகில் மிகப் பிரபலமானது.

திருப்பதி சென்று வரும் அனைவரும் உணரும் விஷயம். நாம அந்த ஸ்ரீனிவாச பெருமாளை அவ்வளவு எளிதா பார்க்க முடியாது. நாம எத்தனையோ வேண்டோதல்களோட தான் அந்த கோவிலுக்கு போவோம். ஆனால் கால் கடுக்க நின்று அவர் சன்னதிக்குள் செல்லும் அந்த நொடியில், அவரை தலை முதல் கால் வரை தரிசனம் செய்யும் அந்த நேரத்தில் நம் மனது எனக்கு எதையும் செய் ன்னு கேட்க தோணாது. ஒரு மாதிரி நிறைவா உணருவோம். அதே சமயம் அந்த சன்னதிக்கு வெளியில் வந்த பின் மீண்டும் அவரின் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்குவோம்..

அப்பேற்பட்ட திருப்பதி வெங்கடேசனை போற்றி பாடும் இந்த பாடல் கேட்கும்போது நான் உணர்வது மனதில் ஒரு நெகிழ்ச்சி தான். பாடல் பாடினாலும், கேட்டாலும் அது முடியும் போது என் கண்ணில் கண்ணீர் வழியும்.

தேன் மதுர குரல் என்று ஒரு சொல் உண்டு. அதற்கு முழு உதாரணம் எம்.எஸ்.அம்மா அவர்கள்தான்.

இங்கிலீஷ் லே rendition ன்னு ஒரு வார்த்தை சொல்லுவோம். அதற்கு சரியான தமிழ் வார்த்தை பக்தி தான். அப்படி ஒரு பக்தி அந்த பாடல் வரிகள் மேலையும், இசை மேலேயும் அவங்க காமிப்பாங்க.

இந்த பாட்டு தெரியாதவங்களே இருக்க முடியாது. அதிக படிப்பறிவு இல்லாதவங்களுக்கு கூட இந்த பாட்டு தெரிந்திருக்கும். அப்படி பட்டி, தொட்டி எல்லாம் இந்த பாடல் பிரபலமடைய காரணம் எம்.எஸ்.அம்மா தான்.

நான் ரசித்த, நெகிழ்ந்த அந்த பாடல் எம்.எஸ்.அம்மா அவர்கள் குரலில் உங்களுக்காக..

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

 

அடுத்த பாடல் .. எம்.எஸ். அம்மாவோட “காற்றினிலே வரும் கீதம்”

மீண்டும் சந்திப்போம்.

Geetham... Sangeetham - 02

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.