(Reading time: 4 - 7 minutes)

05. கீதம் சங்கீதம்.... - தேவி

Geetham sangeetham

ஹாய். பிரெண்ட்ஸ்....

கீதம் சங்கீதம் தொடரில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி... இந்த எபிசொட்.. நவராத்திரி .. முடியும் போது எழுதுவதால்.. இந்த முறை அதை பற்றிய என்னுடைய எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..

நம் பண்டிகைகளில் எனக்கு பிடித்த பண்டிகை நவராத்திரி.. நம் கடவுள் பொம்மைகள், இதிகாசம், புராணங்களின் முக்கிய பகுதிகளை பொம்மையாக வைப்பது வழக்கம் .. பிறகு முக்கிய தலைவர்கள் , சில முக்கிய இடங்கள் இவை எல்லாம் இப்போது கொலுவாக வைத்து அலங்கரிக்கிறோம்... நிறைய விஷயங்களை visualaize என்று சொல்லக் கூடிய ... காட்சிபடுத்துதல்தான் கொலு... டிவிக்கு முன்னோடி என்ற எண்ணம் எனக்கு தோன்றுவதுண்டு..

அடுத்து பக்தியோடு கூடிய கெட் டு கெதர் என்ற எண்ணம் தோன்றும்.. அந்த பத்து நாட்களும் .. ஓரளவு உள்ளூரில் இருக்க கூடிய சொந்தங்கள், நட்புக்கள் எல்லோரையும் சந்திப்பது மகிழ்ச்சி கொடுக்கும்.. ஒரு பத்து இருபது வருடங்களுக்கு முன் வரை .. வீட்டிற்கு வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு ... தாம்பூலமும்.. சுண்டலும் கொடுப்பது தான் வழக்கம்...கொஞ்சம் நெருங்கினவர்களுக்கு ரவிக்கை துணி சேர்த்து கொடுப்போம்.. இப்போது நிறைய மாற்றங்கள்.. வயதிற்கேற்றவாறு .. நிறைய கிப்ட்ஸ் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறோம்...

நவராத்திரியின் அடுத்த முக்கிய அம்சம்... பாட்டு பாடுவது.. அந்த காலத்தில் ஓரளவிற்கு எல்லோருக்கும் சங்கீதத்தின் அடிப்படை அறிவு கொடுக்கப்பட்டு இருந்தது. அதை விரிவு படுத்தவும், மேம்படுத்தவும் இந்த நவராத்திரியில் ஒரு பயிற்சி என்று சொல்லலாம்..

P.சுசீலா அவர்களின் நவராத்திரி பாடல்கள் மிகவும் பிரபலம்..  “ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா.” என்று ஆரம்பிக்கும் பாடல் கேட்டாலே... நவராத்திரி ஆரம்பம் என்று தெரியும்.. அந்த ஆல்பத்தில் வரும் அத்தனை பாடல்களும் .. கேட்டாலே பக்தி பெருகும்.. அது மெல்லிசை பாடல்கள் என்ற வரிசையில் வரும் ...

அதே உணர்வுகளை கொடுக்க கூடிய கர்நாடிக் பாடல் ... “ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசநேச்வரி..” என்ற பாடல்.. அகத்திய முனிவர் எழுதிய இந்த பாடல் ராகமாலிகையில் பாடப்பட்டுள்ளது. நவராத்திரியில் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டவர்கள் நிச்சயமாய் பாடக் கூடிய பாடல்களில் ஒன்று... அம்பாள் பேரில் நிறைய கீர்த்தனைகள் இருந்தாலும் அடிக்கடி கேட்டு பழக்கப்ட்டது மற்றும் எளிதாக மனதில் பதியும் வரிகள் இந்த பாடலில் இருக்கும்.

முதலில் ஆரம்பிக்கும் வரிகள் அந்த ராஜராஜேஸ்வரியின் நாமங்களையும் குணங்களையும் சொல்வதாக இருக்கும்..

அதன் பிறகு .. வரக்கூடிய வரிகள் ... உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் ... உயரிய பெரியோர்கள் ஒன்றிட கூட்டி வைத்தாய்... அந்த வரிகளும் .. பாவமும்...மனதை ஒருமுகபடுத்தும்..

கடைசியில் வரும் அன்பை புகட்டி உந்தன் ஆடலை காணவைத்தாய் ... அடைக்கலம் நீயே அம்மா.. என்ற வரிகளில் அவள் பாதங்களில் சரணடைய தோன்றும்

நிறைய பேர் பாடி கேட்டு இருக்கிறேன்.. அந்த வரிசையில் திருமதி ..சுதா ரகுநாதன்.. பாடிய version எனக்கு மிகவும் பிடித்த ஒன்று... நீங்களும் கேட்டு பாருங்கள்..

 

ராகம்: செஞ்சுருட்டி
ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகே புவனேஸ்வரி

அனுபல்லவி:
ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோஹரி
ஞான வித்யேஸ்வரி ராஜ ராஜேஸ்வரி (ஸ்ரீ)

சரணம்:
1. ராகம்: புன்னாகவராளி
பலவிதமாய் உன்னை ஆடவும் பாடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும்
உலக முழுதும் உன்னை அகமுரக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி (ஸ்ரீ)

2. ராகம்: நாதனாமக்க்ரியா
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோர்கள் ஒன்றிடக் கூட்டிவைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன் ஊழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி (ஸ்ரீ)

3. ராகம்: சிந்து பைரவி
துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி (ஸ்ரீ) 

 

மீண்டும் சந்திப்போம்.

Geetham... Sangeetham - 04

Geetham... Sangeetham - 06

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.