(Reading time: 2 - 3 minutes)

அழகு குறிப்புகள் # 17 - வெயிலினால் ஏற்படும் நிற மாறுதலை 👩 👩 சரி செய்யும் உருளைக்கிழங்கு – எலுமிச்சை பேஷியல் மாஸ்க்

face mask

வெயிலில் செல்வதால் ஏற்படும் நிற மாற்றத்தை சரி செய்ய இந்த மாஸ்க் மிகவும் நல்லது.

அதே போல முகம் முழுவதும் சீராக ஒரே நிறத்தில் இருக்கவும் இது உதவுகிறது.

 

தேவையானவை:

உருளைக்கிழங்கு – 1

எலுமிச்சைப் பழம் – ½

 

செய்முறை:

உருளைக்கிழங்கை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

மெல்ல, மெல்ல எலுமிச்சை சாறை உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்.

இரண்டையும் நன்றாக கலக்கவும்.

 

பயன்படுத்தும் முறை:

மேலே செய்த கலவையை விரல்களை கொண்டு வட்ட வடிவத்தில் (circular movement) முகத்தில் பூசுங்கள்

20 நிமிடங்கள் அப்படியே விட்டிருந்து விட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்

 

தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களினால் ஏற்பட்ட தழும்புகள், கரும்புள்ளிகள் மற்றும் வெயிலினால் ஏற்பட்ட நிறம் மாறுதல்கள் என அனைத்தும் மாயமாக மறைவதை காண்பீர்கள் 👩👩.

{kunena_discuss:1210}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.