(Reading time: 2 - 4 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - 4 ஆரோக்கியமான பானங்கள்

இளநீர்

இளநீர் போல இயற்கையான, ஆரோக்கியமான பானம் வேறு எதுவும் இல்லை!

தேங்காய் நீரில் செரிமானம் மற்றும் பல்வேறு வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கு உதவும் பல்வேறு என்ஸைம்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. அதில் நம் உடலில் உள்ள சோடியத்தை சமப்படுத்த பொட்டாசியமும் இருக்கிறது.

இளநீர் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, உடலில் இருக்கும் நச்சுகளை நீக்குகிறது மற்றும் சிறுநீரக கற்களை உடைக்கிறது.

சைட்டோகினின் எனப்படும் தாவர ஹார்மோன்கள் இந்த பானத்தில் உள்ளன. அது புற்றுநோய் எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளதாக சொல்லப் படுகிறது.

 

மோர் / லஸ்ஸி

தயிரை வைத்து தயாரிக்கப்படும் மோர், இலச்சி போன்ற பானங்கள் சுவையானவை, ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிப்பவை.

நம் உணவில் புரோபயாடிக்குகள் மற்றும் என்சைம்கள் இருப்பது மிகவும் நல்லது. தயிரில் இது நிறைந்து இருக்கிறது.

 

காய்கறிகள் ஜூஸ்

உங்களுக்கு பிடித்த காய்கறிகளை வைத்து ஜூஸ் தயார் செய்யுங்கள்.

புதினா, கொத்தமல்லி, வெள்ளரிக்காய், பீட் ரூட், நெல்லிக்காய், கேரட், சக்கரை வள்ளி கிழங்கு என உங்களுக்கு பிடித்த ஆரோக்கியமான காய்கறிகளை தேர்ந்தெடுத்து ஜூஸ் செய்து முயற்சி செய்துப் பாருங்கள்.

 

சுவை சேர்க்கப்பட்ட தண்ணீர் 

தண்ணீரை அப்படியே குடிப்பதை விட அதன் கூட வேறு சுவை தெரிவதுப் போல குடிப்பது எளிது.

எனவே உங்களுக்கு பிடித்த காய்கறிகளின் துண்டுகள், எலுமிச்சை, புதினா, ஆரஞ்சு, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் வெள்ளரிகள் போன்றவற்றை தண்ணீருடன் சேர்த்து ஒரு வாட்டர் ஜக்கில் வைத்து குடித்துப் பாருங்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.