(Reading time: 3 - 5 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் கொள்ளு

கொள்ளு மிகவும் சத்தான பயிறு வகைகளில் ஒன்றாகும்.

முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் கொள்ளு ஆரோக்கியமான நல் வாழ்வுக்கு பல அற்புதமான நன்மைகளை வழங்குகிறது.

கொள்ளில் அதிக புரதச்சத்து இருக்கிறது. எனவே அதிக சக்தி கொண்டது.

புரதம் தவிர, கார்போஹைட்ரேட், இரும்பு, மாலிப்டினம், கால்சியம் போன்ற அத்தியாவசிய தாதுக்ளும் கொள்ளில் நிறைந்துள்ளது.

இவை நல்ல ஆற்றல், தசை வலிமை, சீரான சிவப்பு ரத்த அணுக்கள் தொகுப்பு, வலுவான எலும்புகள் என அனைத்தையும் கொடுக்க வல்லது.

மேலும், கொள்ளு நமக்கு ஏராளமான வைட்டமின் பியையும் வழங்குகிறது, இது உயிரணுக்களின் இயல்பான வளர்சிதை மாற்ற செயல்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

 

கொள்ளின் ஆரோக்கிய நலன்கள்:

ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, சிறுநீர் பிரச்சினைகள், மஞ்சள் காமாலை, வயிற்றுப் புண், மூல நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சினைகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் கொள்ளு பயன்படுகிறது.

 

சளியை குறைப்பதற்கும், காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கும் கொள்ளு நல்லது.

 

கொள்ளின் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் தோல் நோய் லுகோடெர்மாவுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.

 

கொள்ளு சரும பிரச்சினைகளைத் தடுக்கவும், சருமத்தை சுத்தம் செய்யவும் ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

 

உணவிற்கு பின் கொள்ளு சிறிதளவு உண்பது சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த நல்லது. கார்போஹைட்ரேட் செரிமானத்தை குறைப்பதன் மூலமும், இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலமும் கொள்ளு கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்க உதவுகிறது என்று இந்திய வேதியியல் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

கொள்ளு கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. கொள்ளு உடலில் சேமிக்கப்படும் கொழுப்பு திசுக்களை நேரடியாக தாக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இது உடல் கொழுப்பை குறைப்பதற்கு நல்லது மற்றும் உடலுக்கு சரியான வடிவத்தையும் அளிக்கிறது.

 

பச்சை கொள்ளில் ஃபிளவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் என்ற சக்திவாய்ந்த தாவர பொருட்களின் சக்தி நிறைந்திருக்கிறது. இவை கல்லீரல் மற்றும் பித்தப்பை நோக்கி ஹெபடோபிராக்டிவ் பண்புகளை வழங்குகின்றன.

 

நம் உடலில் கால்சியம் பாஸ்பேட் உப்புகள் படிகமாக்குவதால் சிறுநீரக கற்கள் ஏற்படுகின்றன. கொள்ளில் நிறைந்திருக்கும் அன்டி ஆக்சிடன்ட்கள் இந்த உப்பு கடினப்படுத்துதல் செயல்முறையைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரக கோளாறுகளை சரிசெய்யவும் கொள்ளு நல்ல  மருந்தாகும்.

  

கொள்ளை முளைக் கட்டிய பயிராக அல்லது வேக வாய்த்த பயிராக அன்றாட உணவாக சாப்பிடலாம்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.