(Reading time: 1 - 2 minutes)

Health Tip # 70 - சுட சுட சாப்பிடலாமா?

hot food

லருக்கும் சுட சுட உணவு சாப்பிட பிடிக்கும். ஆனால் அப்படி சாப்பிடுவது சரி இல்லை என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

உணவுப் பொருட்கள் ஆவி பறக்கும் விதத்திலும் இல்லாமல், ஆறி போனதாகவும் இல்லாமல் மிதமான சூட்டில் உண்பது தான் நல்லது.

மிகவும் சூடாக உணவை சாப்பிட்டால், அது உணவுகளை குடலுக்கு எடுத்து செல்லும் மியூகோஸா எனும் படலத்தை பாதிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இந்த மியூகோஸா நம் உடலின் உணவுக் குழாயில் இருந்து குடல் வரை பாதுகாப்பு அரணாக இருப்பது. எனவே மியூகோஸா பாதிப்படைந்தால், அல்சர் வரும் வாய்ப்புகள் அதிகம்.

இதை கவனிக்காமல் விட்டால், செரிமானப் பிரச்சனை, வாய்ப்புண் என்று ஏற்பட்டு புற்றுநோயில் கூட சென்று முடியலாம்.

எனவே சுட சுட உணவை சாப்பிடாமல், மிதமான சூட்டில் சாப்பிட்டு பழகுங்கள்.

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:1131}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.