(Reading time: 1 - 2 minutes)

நான் படித்து ரசித்த பொன்மொழிகள் - சந்தியா

Quote

1. பொறாமை மடமைக்கு ஒப்பானது; போலித்தனம் தற்கொலைக்கு ஒப்பானது. __ எமர்ஸன்

2. உங்கள் நண்பர்களிடம் என்றும் பேசதகாதவை ஏழ்மையும் வறுமையும். __ ஒளவையார்.

3. ஒழுக்கம் பிச்சைக்காரர் உருவில் இருந்தாலும் அதற்கு உரிய மதிப்பளிக்கப்படும். __ ரஸ்கின்

4. பணம் சேரும்போது சேமித்து வைக்காதவன் ஏமாளி. பணத்தை இழந்து நின்றவன் மிகவும் பரிதாபத்துக்குரியவன்; இவர்கள் இருவர்களையும்விட, என்றும் ஏழ்மையாக இருப்பவவன் மிகவும் சிறந்தவன் ஆவான்.__ ஓர் அறிஞர்.

5. குழந்தை உள்ளம் கொண்ட பெண்ணைக் குமுறும் கடலாக மாற்றுபவன் ஆண்தான். __ கார்டன்.

6. ஒன்றை எளிதில் தொடங்காதீர்கள்; தொடங்கிவிட்டால் விட்டுவிடாதீர்கள். __சாண்ட்ரா பிரான்சிஸ்.

7. வெற்றியாளனுக்கும் தோல்வியானுக்கும் இருக்கும் இடைவெளி தகுதிக் குறைவல்ல ஆர்வக் குறைவு. __தயாநிதி.

8. பகைவரின் புன்சிரிப்பைவிட நண்பனின் கோபம் நன்று. __ ஹேம்ஸ்ஹேவெல்.

9. ஆற்றல் இருந்தால் போதுமா அன்பும் இருக்க வேண்டும் .__ வால்டேர்.

10. எந்த வேலையைலயும் தன் விருப்பத்துக்கு ஏற்றதாக மாற்றுபவன் எவனே அவனே அறிவாளி .__ விவேகானந்தர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.