(Reading time: 2 - 3 minutes)

இந்திய மாநிலங்களின் சமத்துவமின்மை விண்வெளியில் இருந்தும் தெரிகிறதாம்!!!! – பிபிசி செய்தி

India

விண்வெளியில் இருந்து எடுக்கப் பட்ட இரவு நேர செயற்கைக்கோள் படங்களில் தெரியும் இருட்டு மற்றும் வெளிச்சங்களை கொண்டு பொருளாதார நிபுணர்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியுட்டுள்ளார்கள்.

 

அதன் படி 1991 – 2014க்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் இருக்கும் சராசரி நபர், ஏழை மாநிலங்களில் வசிக்கும் சராசரி நபருடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, முன்பு இருந்ததற்கு இப்போது மூன்று மடங்கு அதிகம் பணம் உடையவராக மாறி இருக்கிறாராம்!!!

 

இப்படி இரவு விளக்குகளை வைத்து ஆராய்ச்சி செய்வது சரியா, அதில் நம்பகத்தன்மை இருக்கிறதா என்ற கேள்விகள் எழுவது இயற்கை.

 

அதை எல்லாம் ஒதுக்கி விட்டு, இவர்கள் சொல்லும் பணக்கார மாநிலங்கள் எது எது என்று பார்ப்போம்!! கேரளா, தமிழ்நாடு & மஹாராஷ்டிரா தான் அந்த டாப் 3 மாநிலங்கள்!

 

ஏழை மாநிலங்கள் – பீகார், உத்தர் பிரதேசம், மத்திய பிரதேசம்.

 

நம் நாட்டில் மாநிலங்கள் இடையே இருக்கும் சமத்துவமின்மையை நினைத்து வருத்த படும் அதே நேரத்தில், நம் மாநிலத்தின் இந்த சிறப்பு அந்தஸ்தையும் நினைத்து பெருமைக் கொள்வோம்!

 

{kunena_discuss:943}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.