(Reading time: 2 - 3 minutes)

01. விசித்திர உலகம் – பெண்களும் பேன்ட்ஸும்...

பெண்களுக்கு டிரஸ் கோட் பற்றி நாம ஊருல எல்லோரும் இப்போ நிறைய பேசிட்டு இருக்காங்க.

இது போல விஷயங்கள் நம் நாட்டில் மட்டுமில்லை மேற்கத்திய நாடுகளிலும் கூட நடந்திருக்கிறது...

மெரிக்காவில் உள்ள பாஸ்டனில் எம்மா ஸ்னாட்கிராஸ் என்பவர் பேன்ட் (pant) ஷர்ட் அணிந்து காட்சி தந்தது அங்கே பெரிய ‘சென்சேஷனை’ உருவாக்கியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆனால் இது நிஜம்....

ஆண்கள் உடையை அணிந்துக் கொண்டதற்காக எம்மாவை கிண்டல் மட்டுமில்லை கைது கூட செய்தார்கள்.

ஆனால் எம்மா மீண்டும் மீண்டும் தன்னுடைய “அட்வென்ச்சரை” தொடர்ந்தார்.

பல செய்தாள்களில் வந்த இந்த செய்தியினால் எம்மாவிற்கு கன்னாபின்னாவென்று மக்கள் கேலி பெயர் சூட்டினார்கள்...

ஆண் உடை அணிந்த நாடோடி

ஆண்கள் உடையில் சுற்றும் முட்டாள் பெண்

ஊரை சுற்றி திரியும் விசித்திர பெண்

இன்னும் என்னென்னவோ....

ம்ம ஊர்லேயும் கிட்டத்தட்ட இதே தான் இப்போ நடக்குது...

பெண்களுக்கு டிரஸ் கோட் நிர்ணயம் செய்பவர்கள், ஆண்கள் த்ரீ போர்த் என சொல்லப்படும் ஷார்ட்ஸ் அணிந்து வெளியே சுற்றாதீர்கள் என்று ஏன் சொல்வதில்லை??? அதை பார்த்து பெண்களுக்கு மனதில் சலனம் ஏற்படாதா???

ஆண்களுக்கு மட்டும் தான் சலனங்கள் உணர்வுகள் எல்லாம் உண்டா...

அடடா!!! நாமெல்லாம் பெண்கள் ஆச்சே இதை பத்தி எல்லாம் பேசலாமா? பேசவே கூடாதுங்க!

என்ன உலகமடா இது....!

மேலே சொன்ன எம்மா ஸ்னாட்கிராஸ் விஷயம் நடந்தது 1852-ல்! நாம இன்னும் அங்கே தான் இருக்கோம் போல இருக்கு!

What a funny funny world.

News

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.