(Reading time: 1 - 2 minutes)

இன்டர்நெட்டின் லேட்டஸ்ட் 'கிரேசி' சவால்

Mannequin challenge

வ்வப்போது கொஞ்சம் வித்தியாசமான (கிறுக்குத்தனமான) சவால்கள் வைரலாக பரவுவது சமீபத்தில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் பரவிய 'ஐஸ் பக்கெட் சேலஞ்' அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

அந்த வரிசையில் இப்போது லேட்டஸ்டாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சவால் 'மேநிக்கின் சவால்' (Mannequin Challenge).

உறவினர்கள், நண்பர்கள் என கும்பலாக இருக்கும் இடத்தில், அனைவரும் அசையாமல் 'ஸ்டில்' போஸில் நிற்க, ஒருவர் மட்டும் நடந்து அங்கே ஸ்டில்லாக நிற்பவர்களை விடியோ எடுத்து ட்விட்டர் போன்ற சமுக வலைத்தளங்களின் பகிர்ந்துக் கொள்வது தான் இந்த மேநிக்கின் சவால்.

ஏற்கனவே விளையாட்டு வீரர்கள் துவங்கி பல பிரபலங்கள் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு விடியோ பகிர்ந்துக் கொண்டதால், லேட்டஸ்ட் ட்ரெண்டாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது இந்த சவால்.

நீங்களும் கூட முயற்சி செய்து பாருங்கள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.