உயிருடன் இருப்பவர்களை ‘சாகடித்த’ ஃபேஸ்புக்
புது புது அம்சங்களை அவ்வப்போது வெளியிட்டு பல கோடி மக்களின் மனதை கொள்ளைக் கொள்ளும் ஃபேஸ்புக் சமீபத்தில் ஒரு சின்ன(!!!) தவறை செய்தது.
ஃபேஸ்புக் பயனர் இறந்தால் அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் இரங்கல் செய்தி தோன்றுவது போல புதிய அம்சத்தை சமீபத்தில் கொண்டு வந்திருந்தது ஃபேஸ்புக்.
ஆனால் சின்ன தவறு நேர்ந்து உயிருடன் இருப்பவர்களின் ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்த இரங்கல் செய்தி தோன்றி பலரையும் குழப்பி விட்டது!
இதில் சுவாரசியமான விஷயம் என்ன என்றால் ஃபேஸ்புக் கண்டுபிடித்த மார்க் சக்கர்பெர்க் பக்கத்திலும் இரங்கல் செய்தி தோன்றியது தான்!
தவறுகள் மூலமும் பரபரப்பை ஏற்படுத்த ஃபேஸ்புக்கால் மட்டுமே முடியும்.