(Reading time: 2 - 3 minutes)

படித்ததில் பிடித்தது - உழவனின் உழைப்பை வீணடிக்காதீர்...!! - வசுமதி

பாம்பு சட்டை படத்தில் வரும் ஒரு வசனம் என்னை மிகவும் ரசிக்கவும் யோசிக்கவும் வைத்தது....

சாப்பிடும் போது

ப்பா (சார்லி)  -  சின்னக்குட்டி சிந்தாம சாப்புடுரா.

கள்  -  அப்பா ஒரு பருக்க தானப்பா?

ப்பா (சார்லி)  -  ஒருபருக்கை, எதோ ஒரு ஊர்ல யாரோ ஒரு விவசாயி நிலத்துல நெல்லா இருந்து இருக்கும்.அது அறுவடை பன்னும்போது வயலுல விழுந்து இருக்கலாமல.இல்ல களத்துல அடிக்கும்போது செதரி இருக்கலாமல.அதுலலாம் தப்பிச்சு ரைஸ் மில்லுக்கு போய் இருக்கும். அங்க அவுச்சு, அரைச்சு, பொடைச்சு இதுலலாம் தப்பிச்சு கடைசியா அரிசி ஆயிருக்கும்.அந்த அரிசிய உங்க அம்மா கழுவும்போது நழுவாம,வடிக்கும்போது தெறிக்காம,பதமா உனக்கு சோறு ஆக்கி போட்டு இருக்காங்க.இத்தனையும் தான்டி உன் தட்டுக்கு வந்த ஒருபருக்கை,உன் அலட்சிய போக்குநால குப்பைக்கு போனும்மாடா?

மகள் சொல்லும் போதே, மகள் பருக்கையை, தட்டில் எடுத்து போட்டுக்கொள்வாள்.

தயவு செய்து உணவை வீணாக்காதீர்...

உணவை தலைகுனிந்து உண்பது

பூமிக்கு நன்றி கூற..!

தண்ணீரை தலைஉயர்த்தி குடிப்பது

மேகத்திற்கு நன்றி கூற..!!

 தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர் வசுமதி

 

{kunena_discuss:1107}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.