(Reading time: 2 - 4 minutes)

ஆன்மீகக் குறிப்புகள் - 06 - ரவை

Spiritual tips

 

1.இறைவனை 'சுவாமி' என ஏன் அழைக்கிறோம்?

'ஸ்வம்' என்ற சொல்லுக்கு 'சொத்து' என்று அர்த்தம். சகல பிரபஞ்சமும் இறைவனின் சொத்தானதால், அவனை 'சொத்துக்காரன்' 'சுவாமி' என்கிறோம்.

 

2.விஞானிகள் புதிது புதிதாக எதை எதையோ கண்டுபிடிக்கிறார்களே, ஒரு சாதாரண சின்னஞ் சிறிய இலையை செய்யமுடியுமா?

 

3.'நான்'என்று சொல்கிறோமே, அந்த நானும் இறைவனுக்கே சொந்தம். நாம், இறைவன் இஷ்டப்படி விநியோகிக்க, உபயோகப்படுத்தப்படுகிற பொருள்! நாம் சுயமாக எதையும் செய்யமுடியாது. அதனால், நிம்மதியாக ஆனந்தமாக எப்போதும் நாம் இருக்கலாம். 

 

4.குளத்தில் ஸ்நானம் செய்யும் ஒவ்வொருவரும், நாலுகை மண்ணெடுத்து வெளியில் போடவேண்டும். அப்போதுதான், குளங்கள் பூரண ஆழத்துடன் நல்ல நீருடன் இருக்கும்.

 

5."நான் சுகமாக ஆழ்ந்து தூங்கினேன்" என்று சொல்கிறோமே, அந்த சுகம் எங்கிருந்தது வந்தது? நம் உடல் உறுப்புகளிடமிருந்து அல்ல; ஆன்மாவிடமிருந்து வந்தது. அதுதான் நம் இயல்பான குணம், சுகமாயிருப்பது!  மனதை மௌனமாக்கி, உடலை அடக்கிவிட்டால், அந்த சுகத்தை நிரந்தரமாக அனுபவிக்கலாம்.

 

6.மூன்றிலிருந்து ஒன்றை கழித்தால், ஒன்று! எப்படி? நிலைக்கண்ணாடியில் முகம் பார்க்கும்போது, இருப்பது மூன்று! முகம், நிலைக்கண்ணாடி, பிரதிபிம்பம்! மூன்றில் ஒன்றான நிலைக்கண்ணாடியை அகற்றினால், மிச்சமிருப்பது, முகம் மட்டுமே! மூன்றில் ஒன்றை கழித்தால், ஒன்று!

 

7.கண்ணாடியில் முகம் பார்க்கும்போது, அதில் தெரிகிற முகபிம்பத்தையும் அதனுடன் கண்ணாடியில்  உள்ள கீறல்களையும் குப்பைகளையும் சேர்த்து, அவையே நாம் என நினைப்பதுபோலத்தான், உடலையும், மனதையும் நாமென நம்புவது!

 

8.சூரியனை, சில சமயங்களில் கருத்த மேகங்கள், நம் பார்வையிலிருந்து மறைக்கும். உடனே, சூரியன் மறைந்துவிட்டான் என்று கூறுவதை ஏற்கமுடியுமா? நம் பார்வையில் படவில்லை என்பதே உண்மை!

 

9.காற்று தான் மேகங்களை சேர்க்கிறது, அதே காற்றுதான் மேகங்களை கலைக்கவும் செய்கிறது. அதைப்போல, மனம் நமக்கு கட்டுப்படுத்தவும் செய்யும், விடுவிக்கவும் செய்யும்!

 

 

 

 {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.