(Reading time: 4 - 7 minutes)

ஆன்மிகம் - சிறு சிறு ஆன்மிகக் குறிப்புகள் - அறிந்ததும்..அறியாததும் - 05 - தங்கமணி சுவாமினாதன்

Aanmigam

ன்று நாம்.. ஜெகன்மாதாவாகிய அம்பாள் நம்மை எவ்வாறு காக்கின்றாள் என்பதை அறிவோமா?..

உலகங்களுக்கெல்லாம் அன்னை அம்பாள்தான்.புவனம்பதினாங்கையும்பெற்றவள்.பெற்றவண்ணம் காப்பவள.சிவனுக்கு மூத்தவள்.படைத்தல்,காத்தல்,அழித்த்தல்,மறைத்தல்,அருளுதல் என்ற ஐந்து செயல்களைச் செய்பவள்.பிரபஞ்சம் முழுதும் அவளது ஆட்சியே.அவளின்றி ஓர் அணுவும் அசையாது.சக்தியில்லை எனில் சிவனே செயலற்று விடுகிறான்.

அம்பாளின் பாதங்கள் பட்ட திருமண் துளிகளையெடுத்து பிரம்மா உலங்களைப் படைக்கிறார்.

விஷ்ணு இவற்றைத் தலைமேல் ஏற்று உலகைக் காக்கும் தொழிலைச் செய்கிறார்.

பரமேச்சுவரனோ இவ்வுலகங்களை அழித்து திருநீராக இட்டு மகிழ்கிறார்.

அம்பாளை முன்னிட்டே மும்மூர்த்திகளும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனர்.

நாம் அனைவருமே அம்பாளின் குழந்தைகள்தான் அல்லவா?

அவளின் குழந்தைகளாகிய நம்மை--கிழக்குத் திசையில் இருந்து.... இந்திராணியும்..

அக்னி மூலையில்... அக்னி தேவதையும்,

தெற்கில்...வாராகியும்..

மேற்கில்..வாருணியும்..

வாயு மூலையில்..ம்ருக வாகினியும்..

வடக்கில்..கௌமாரியும்..

ஈசான மூலையில்..சூலதாரிணியும்

மேலே..ப்ரஹ் மாணியும்

கீழே..விஷ்ணு சக்தியும்

ஜயா சக்தி..முன்புரமும்

விஜயா சக்தி..பின்புரமும்.

அஜிதா..இடது பக்கமும்..அபராஜிதா..வலது பக்கமுமாய் நின்று நம்மைக் காக்கின்றாள்.

நமது சிரசை.1..உமாதேவியும்.2.சிகையை..உத்யோதினியும்...3..புருவத்தை..யசஸ்வினியும்..

4.புருவ மத்தியில்..த்ரினேத்ரா தேவியும்.5.நாசியை..யமகண்டா தேவியும்...6.கண்களை..சங்கினீ யும்

7.காதுகளை..துவார வாஸினியும்..8.கன்னத்தை..காளிகா தேவியும்..9.மேலுதட்டை..சர்ச்சிகாவும்

10.கீழுத்தட்டை...அம்ருதகலாவும்..11.பற்களை..கௌமாரியும்..12.கழுத்தின் நடுவில்..சண்டிகையும்.

13.உள்நாக்கை..சித்ரகண்டாவும்..4.தாடையை..மகாமாயையும்..15.முவாய்க்கட்டையை..காமாக்ஷியும்..16.வாக்கை..சர்வமங்களா தேவியும்..17.கழுத்தைப்.. பத்ர காளியும் 18.முதுகெலும்பை..தனுர்த்தரீயும்..19.கழுத்தின் வெளியில்..நீலக்கிரீவாவும்  20.கழுத்தெலும்பை.. நளகூபரியும்..21.இரு தோள்களையும்...கட்கதாரிணியும்..22.இரு புஜங்களையும்..வஜ்ரதாரிணியும்

23.கைகளை..தண்டினியும்..24.விரல்களை..அம்பிகையும்..25.நகங்களை..குலேச்வரியும்..

26.கஷ்க்கங்களை..அனலேஸ்வரியும்.27.ஸ்தனங்களை..மகேஸ்வரியும்28.மனதை..சோகவினாசினியும்...29.இருதயத்தை..லலிதாதேவியும்..30.வயிற்றை..சூலதாரிணியும்.31.நாபியைக்..காமினிதேவியும்..32.ரஹஸ்யபாகத்தை..குஹ்யேஸ்வரியும்..33.ஆண்குறியை..பூதனாதாவும்..34.அபானத்துவாரத்தை..மஹிஷ வாகினியும்..35.இடுப்பை..பகவதியும்..36.முழங்கால்களை..விந்திய வாசினியும்..

37.துடைகளை..மகாபலாதேவியும்..38.முழங்கால் நடுவில்..வினாயகீதேவியும்..39.கணுக்கால்களில்.

நாரசிம்ஹீதேவியும் 40.பின்னங்கால்களை..மிதெவ்ஜசியும்..41கால் விரல்களை..ஸ்ரீதரியும்..

42.பாதத்தின் கீழ்..தலவாசினியும்..43.நகங்களை...தம்ஷ்ட்ராகியும்..44.மயிக்கால்களை..கெளபேரியும்

45.தோலை..வாகீஸ்வரியும்..46.ரத்தம்,மாம்சம்,கொழுப்பு,எலும்பு,மூளை,வீரியமமனைத்தையும்...

பார்வதியும்..47.குடல்களைக் காலராத்திரியும்..48.பித்த தாதுவை..முகுடேஸ்வரியும் 49.சுபதாதுவை..சூடாமணியும்..50.நிழலை..சத்ரேஸ்வரியும்..51.ப்ரம்மாணி..சுக்லத்தையும்.. காப்பதாக..சாஸ்த்திரங்களும்.முனிவர்களும்,ஆன்மிகப் பெரியவர்களும் சொல்லியிருக்கிறார்கள்

அம்பாளின் அனேக சக்தி வடிவங்கள் ஒவ்வொருவரின் உடலின் ஒவ்வொரு அவயவங்களையும் காப்பதால்தான் நம் உடலை ஒரு கோயில் என்றும் உள்ளே இருக்கும் இதயத்தை இறைவன்வீற்றிருக்கும் சன்னிதானம் என்று சொல்கிறார்களோ?

நம் உடலும்,உள்ளமும் இறைவன் சம்பந்தப்பட்டது என்பதால்தான் அவற்றைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதோ? அப்படி இறைவனோடு சம்பந்தப் படுத்தி சொன்னால்தான் மனிதன் தூய்மையாக இருப்பான்..அதுவே அவன் ஆரோக்கிய வாழ்வுக்குக் காரணமாய் இருக்கும் என்பதால்தானோ?..

கொஞ்சம் படிக்க,புரிந்து கொள்ளக் கடினமாக எழுதியிருக்கிறேனோ என்றுதோன்றுகிறது..என் முயற்சிக்கேனும் ஒரு முறை படியுங்களேன்..இனி வருவது எளிமையாக இருக்கும்..சரியா? நன்றி...      

ஆன்மிகம் வளரும்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.