(Reading time: 3 - 5 minutes)

 

This kavithai is submitted by 'Vanaja D'.

Got this as a forward long time back, don't know the author. But really worth a read! 

பள்ளிப் பருவம்

பத்தாத சட்டையும் அரைக்கால் ட்ராயருமாய்

ஏபிசிடி எழுதிய பள்ளிப் பருவம்-
குட்டிக் குறும்புடன் சுட்டிக் குழந்தையாய் 
நான் வளர்கிறேனே மம்மி.
 
தினம் தினம் மாட்டு வண்டி
எங்கள் பள்ளிப் போக்குவரத்து.
இன்னும் கண்களில் அசையும் அந்தக்
காட்டு வழிப்பாதையில் மாட்டு வண்டிப் பயணம்.
 
பள்ளிக்கு போக மனமில்லாமல் மாட்டு வண்டியை
ஓட்டும் வெள்ளச்சாமியை மெதுவா ஓட்டு வெள்ளச்சாமி
ஸ்கூல் பக்கம் வந்திருச்சு.
சாயங்காலம் சீக்கிரம் வந்து நில்லு - இப்படி
கெஞ்சாத நாளில்லை.   
 
மே மாத விடுமுறையில் நண்பர்களுடன் ஊர்சுற்றி 
செம்மண் புழுதி படிந்து சாயங்காலம் வீடு வர
மிரட்டத் தடியுடன் காத்திருக்கும் அம்மாவிற்கு
பயந்து ஓடி ஒழிந்த அந்த அழகிய வயது.
 
விடுமுறை முடிந்து ஜூன் மாதம் வந்தாலும்
புது வகுப்பிற்கு செல்லும் மகிழ்ச்சியில்
குதூகலமாய்ச் சென்று பழைய நண்பர்களுடன்
புதிய பெஞ்சில் அமரும் அந்த அழகிய வகுப்பறை.

நாட்கள் கடந்து செல்ல சிறுசிறு சண்டைகள்
விரைவில் இணையும் கள்ளமற்ற நெஞ்சங்கள் 
வாரம் இருமுறை வரும் கேம்ஸ் பீரியடுக்காக 
தினம் தினம் அத்தனை எதிர்பார்ப்பு!
 
ஒவ்வொரு வகுப்பிலும் உற்சாகக் குரலில்
அழகாய்ச் சொல்லும் பிரஸன்ட் சார்.
வகுப்பு நடக்கையில் பக்கத்துக்கு நண்பனுடன்
ஆசையாய் விளையாடும் புத்தகக் கிரிக்கெட்.
 
தமிழ்ச் செய்யுளும் ஆங்கில கிராமருமாய் 
ஊட்டப்பட்ட அறிவு கல்வியின் அடுத்தபடி.
திப்பு சுல்தான் கதைகள் சொல்லி
தூங்க வைக்கும் ஹிஸ்டரி மாஸ்ட்டர்!
 
பள்ளி முடிந்ததும் வேகமாய் ஓடி
பள்ளிப் பேருந்தின் ஜன்னலோர இருக்கை
எனக்குத்தான் வேண்டுமென அத்தனை ஆர்ப்பாட்டம்
செய்யும் அந்த வயதில் ஆசை அவ்வளவுதான்.
 
அறிவு வளர ஆனந்தம் குறைந்தது.
கழுதை வயசாகுதல்ல ஒழுங்கா படிக்காம -
அணைத்த நெஞ்சங்கள் அறிவுரை ஊட்டின 
கொஞ்சம் பக்குவப்பட்டது என் மனசு!
 
கம்ப்யூட்டர் படிக்க தொடங்கிய காலம் -
என் முதல் ப்ரோக்ராம் எர்ரரை மட்டுமே
அவுட்புட்டாக கொடுத்தது. 
இன்டெல் இன்சைடு இடியட் அவுட்சைட் 
அர்த்தம் புரிந்தது!
 
காலப் போக்கில் கிடைத்தது வேலை.
அன்று நான் தொடக்கூட கிடைக்காத
கம்ப்யூட்டர் என் கையில் கைக்கணினி என்ற பெயரில்
சந்தோஷத்தை மாதக் கடைசியில் வாங்குகிறேன் - சம்பளமாய்!
 
பாஸ்ட் புட் சாப்பிட்டுவிட்டு பாஸ்ட்டாக நடக்கிறேன்.
என் மனது முழுதும் க்ளையன்ட் மீட்டிங் 
பற்றிய சிந்தனைகள்.
எதிரில் வந்தவர் முகம் எங்கேயோ பார்த்தது போல - 
நேரமில்லை நடந்தேன்.
 
அடுத்த நாள் காலை ஆபீஸ் வந்ததும் 
நேற்றைய முகம் மனதில் வந்தது.
ஸ்வைப் இன் செய்யும் இயந்திரம் அவரை உறுதி செய்தது - அட நம்ம
ராமசாமி வாத்தியார்.
அவரிடம் நான் சொல்லும் பிரசன்ட் சார்!   



No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.