(Reading time: 1 minute)

 

வரம் வேண்டும் இறைவா 

அகவை ஏறா புது வருடம் வேண்டும் இறைவா

இல்லை, இந்த வரம் வேண்டாம் !

அதிக கட்டணம் இல்லா கல்வி வேண்டும் இறைவா

இல்லை, இந்த வரம் வேண்டாம் !

செலவு இல்லா வரவு வேண்டும் இறைவா

இல்லை, இந்த வரம் வேண்டாம் !

அசதி அடையா வேலை வேண்டும் இறைவா

இல்லை, இந்த வரம் வேண்டாம் !

வட்டி இல்லா கடன் வேண்டும் இறைவா

இல்லை, இந்த வரம் வேண்டாம் !

வரி இல்லா வருமானம் வேண்டும் இறைவா

இல்லை, இந்த வரம் வேண்டாம் !

ஊழல் இல்லா அரசாங்கம் வேண்டும் இறைவா

ஆம் !!! இவ்வரமொன்று போதும் இறைவா

கட்டறவர் கல்லாதவர் ஏழை எளியவர்க்ள்

அனைவரும் இவ்வுலகில் பிழைத்திட !!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.