(Reading time: 1 - 2 minutes)

 

பாதை  

 

என் லட்சிய பாதையில்
இருந்து என்னை மாற்றத் துடிக்கும்
என் குடும்பமும் என் சுற்றதோற்கும்
இதுவரை என் பதில் மௌனம் மட்டுமே...

என் பெற்றவர்களிடத்தில் விவாதம்
வேண்டாம் என தவிர்ப்பதும் குற்றமானது...

விருப்பமில்லாத வேலையில்
எனக்கு உயிர்ப்பு இருக்காது
இது யார்க்கும் புரியவில்லை...

போராடி  தோற்றுவிட்டேன்
எனக்கான   பாதையில்  செல்ல
இனி தெரிந்தே  தோற்க  முடிவெடுத்தேன்  
இவர்களது  விருப்பமாவது
நிறைவேறட்டும் என்று 

இனி  என்  வேலையில் 
உயிர்ப்பும் இல்லை  சுவாரஸ்யமும்  இல்லை 

மௌனத்தை  பதிலை  தந்த 
நான்  இனி   மௌனியாய்  ஆவேன்
என்  உணர்வுகளும்  கனவுகளும்
புரிந்து  கொண்டு  துணையாய்
என்  பாதையில்  வருவார்கள்  என்ற 
காத்திருப்போடு  பயணம்  தொடங்கும் 

பாதை  மாறி பயணம்  செய்தாலும்
என்  கனவுகளும்  லட்சியமும்
என்றாவது  கைகூடும்

என்  கடமையை  செய்ய  செல்கிறேன்
மகளாய்   சகோதரியாய் 
குடும்பத்தின்  அங்கமாய்

கனவை  நிறைவேற்றும்
காலம்  மாறலாம்
கனவுகளும்  லட்சியமும்  மாறாது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.