குட்டிஸ்....
சின்ன சிறு விழிகளில் கொஞ்சும் மொழி பேசிடுவாள்,
பட்டு கன்னத்தில் மை பொட்டுயின் அழகில்
பார்ப்பவரின் மனதை கொள்ளை செய்வாள்,
முத்து சிரிப்பில் கவலைகளை மறக்க வைப்பாள்,
புரியாத வார்த்தைக்கு அர்த்தம் சொல்லிக் கொடுப்பாள்,
குட்டி கைகளுக்கு முத்தம் குடுக்க வைப்பாள்,
அவளின் முதல் நடையை ரசிக்க வைப்பாள்...