(Reading time: 1 minute)

அலை கடல் இன்னிங்க்ஸ் - மது

புயலோ!  மழையோ!- ஒரு நாளும் 

இந்த ஆட்டம் நிற்காது.

 

ஓவர் கணக்கு முறைகள் 

இந்த மேட்சுக்குக்  கிடையாது. 

 

எப்போதாவது  ஒரு சிக்சர்.. 

அதற்கு பெயர்  சுனாமி!

 

அவ்வப்போது சில பவுண்டரி.. 

அன்று வானில் பவுர்ணமி! 

 

சிங்கிள்ஸ் மட்டுமே அடித்தாலும் 

காண வரும் ரசிகர் கூட்டம் ஏராளம்.

 

கிரௌண்டில் குதித்து  ஆட்ட  நாயகனை 

கட்டித் தழுவி  ஆரவாரம். 

 

அடடா !!!

இன்னும் எல்லோரும் எதற்காக வெய்டிங்ஸ்??

கிளம்புங்கள் கண்டு மகிழலாம்… 

அலைகடல் ஆடும் “நான் ஸ்டாப்” இன்னிங்க்ஸ்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.