(Reading time: 2 - 4 minutes)

நம்ம ஊரு,  நம்ம ஸ்டைலு டைட்டானிக் - மது

உச்சி மண்டைய பிளக்கும் வெயிலு

சுத்தி வர தெரியுது நீலக் கடலு

மகராசியா மிதக்குறா டைட்டானிக் கப்பலு

ரோசா ஜக்கு காதல் கதைய நீ கேளு

 

ஆத்தாவுக்கு கட்டுப்பட்டு தலைய ஆட்டிபுட்டா

அத்தானும் பரிசம் போட பலி ஆடா ஆகிவிட்டா

அவளுக்கு பிடிக்காத கல்யாணம்  சாக நினைச்சிட்டா

ஆழமான கடலுக்குள்ள குதிக்க துணிஞ்சிட்டா

 

அடியே ! என் மனச திருடின ஜில்லு

கடலு தண்ணி ஐஸா குளிரும் தள்ளி நில்லு

நீ குதிச்சா நானும் குதிச்சிருவேன்

என் உசிர குடுத்து உன் உசிர மீட்டிருவேன்

 

அந்த நிமிஷம் அவன நினச்சுபுட்டா

அத்தானோட தன் நிச்சயத்த உடைச்சுபுட்டா

தவறி விழ இருந்தேன் காப்பாத்தியது  ஜக்கு

தக்க சன்மானமா அழைப்பு  கொடு விருந்துக்கு

 

கோட்டு சூட்டில் சோக்கா இருக்கியே என் ராசா

உன்ன எண்ணி தினம் உருகுது இந்த ரோசா

ஆத்தாவும் ஐத்தானும் முறைக்கிறாங்க ஒரு தினுசா

அஞ்சாத புள்ள உன்ன என் கூட கூட்டி போறேன் விரசா

 

என் மாமன் கொடுத்த வைரம்

இனி அவருக்கும் எனக்கும் வெகு தூரம்

என்ன சித்திரமா தீட்ட உனக்கு என்ன வேணும் கூலி

கரை சேர்ந்ததும் உன் கையாள வாங்கிக்குவேன் தாலி

 

வேகத்த கூட்டு ; கப்பலு பறக்கட்டும் கடலில 

வேட்டு வச்சிருச்சு பனிப்பாற நட்ட நடுவில

முழுக ஆரம்பிச்சிருச்சு படகுக்கும்  பஞ்சம்

மயான கலவரம் அங்க மரண அச்சம்

 

படகில போகாம  திரும்ப வந்தா அவன்கிட்ட

பிழைச்சாலும் மரிச்சாலும்  இருப்பேன் உன் கூட

அவனுக்குள்ள ரொம்ப நாளா  தூங்கிகிட்டு இருந்த சிங்கத்த

அவ காதலு உசுப்பி விட்டிருச்சு இனி பாருங்க சாகசத்த

 

ஒத்தை கட்டைய  மிதக்க விட்டு

ஒத்தக் காலால ஊன்றி நின்றுகிட்டு

தன்னோட சேர்த்து அவள பிணைச்சான்

தண்ணீய சீறிக் கிழிச்சு பாயிஞ்சான்

 

உடைஞ்ச பாறைக்கும் மூழ்குற கப்பலுக்கும்

ஊஞ்சல கட்டித் தொங்க விட்டான்

பாற மிதக்க கப்பல் நகர

பகலு புலரும்முன்னே கரை சேர்த்தான் 

 

உசிரு ஒன்னும் மாளாம காப்பாத்தினான்

ஊரே வாழ்த்து பாட ரோசாவ கைப்பிடிச்சான் 

கப்பலு உடைஞ்சாலும் காதல் வாழ வச்சிருச்சு

காலம் கடந்தாலும் அழியா கதையா நிலைச்சிருச்சு

 

நம்ம ஊரு நம்ம ஸ்டைலு டைட்டானிக்

இல்ல இங்க சோகம் எப்போதும் சுபம் சுபம்

 

(இது முழுக்க முழுக்க ஒரு ஜாலியான  கற்பனையே…. நிஜக் கதையை எந்த விதத்திலும் கேலி செய்யும் நோக்கமில்லை…..இந்தக் கதையில ஏன் எப்படி லாஜிக் பார்க்காம தமிழ் சினிமா மாதிரி நினைச்சிகிட்டு சந்தோசம்மா படிங்க….)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.