(Reading time: 1 minute)

பொங்கலோ பொங்கல்!!! - மது

பனிப் போர்வைக்குள் சுகமாய்

பகலவன் துயில் கொள்ள

பிற்பகல்  பொங்கல்!!!

 

பொங்கலோ பொங்கல் என

பரவசமாய்  விசில் கூவ 

பொங்கி வழியா குக்கர் பொங்கல்!!!

 

பட்டு குஞ்சமும் சலங்கையும் பூட்டிய

பசுவின் பிரதிநிதியாய் 

பால் பாக்கெட்டுக்கு மாட்டுப் பொங்கல்!!!

 

காற்றாடி பறக்க காளை பூட்டி  

கலைகட்டும் வில்வண்டி  ஊர்வலம் அதே 

கலகலப்போடு ஸ்கைப்பில் காணும் பொங்கல் !!!

 

இன்றைய இன்டர்நெட் யுகத்தின் 

இலக்கணமாய்  சில்சீயில் பதிவு செய்கிறேன்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.