(Reading time: 1 - 2 minutes)

என்றும் பெண்மை - கவிதை போட்டி - 21 - பெமினா கஃப்பர்

என் தாயின் பாத கோடுகள்

அவை தான் பித்த வெடிப்புகள்

ஒவ்வொரு கோடும் சொல்லும்

அவளின் துயரம்

அவை தான் அவள் வாழ்வின் வறுமை

அவள் தொலைத்த மகிழ்ச்சி

அவள் அனுபவித்த வன்கொடுமை

அவள் கடந்து வந்த காம கொடுமைகள் 

அவள் பந்தங்களுக்காக செய்த தியாகங்கள்

அவள் தொலைத்த சிறந்த தோழமைகள்

இன்னும் பல சுமைகள்

இருந்தும் அவளின் அழுத்தமான ஒவ்வொரு

பாத சுவடுகள் சொல்லும்

இவை அனைத்தையும் கடந்து அவள்

சாதித்த சரித்திரம்

கூன் விழுந்த அவள் என்னை நிமிர்ந்து

பார்த்து நீ இந்த நாட்டுக்கு செய்யும் கடமை

என் வாழ்வின் பெருமை என்று...

ஆம்..,

ஒவ்வொரு பெண்ணின் சரித்திரம் கவனிக்க வேண்டிய

சஹாப்தம்..., இன்னும் அவள்

அழுத்தமான சுவடுகளோடு முன்னேறுகிறாள்

என்றும் அவள் முன்னோடி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.