(Reading time: 1 - 2 minutes)

கற்பு - ஜான்சி

கற்பு என்பது விலைப் பொருளா ?
இல்லை அழிந்திட விளைப் பொருளா?
 
பட்டாம்ப் பூச்சியின் வண்ணங்கள் போலே எண்ணங்கள் கொண்ட மங்கையவள்;
தீய எண்ணங்கள், நாட்டங்கள் கொண்ட கயவன் அவன்.
 
அன்று நிகழ்ந்தது ஒரு வன்முறை அரங்கேற்றம்;
சூறையிடப்பட்டது அவள் மனக் கனவுகளின் மலர்த் தோட்டம்.
 
சாலை விபத்தில் மீண்டவர் பெறுவர் அனைவரின் பரிவை ;
ஆனால், பாவி இந்நங்கை பெறுவதுவோ பரிகாச பார்வை.
 
அடிப்பட்ட பறவைப் போல் அவள் தவித்திருகக;
அவள் கற்பிழந்தவள் என உலகம் துன்புறுத்தும்.
 
ஊனமுற்றோர்க்கு நல்வாழ்வு தரும் மனங்கள்;
இவளுக்கு தந்திடவே மறுத்திருக்கும்.
 
கள்வனுக்கு பொருட்களை பரிசளிக்கும் வழக்கம் நம்மிலே என்றும் இல்லை அன்றோ!!
பின்னர் கயவன் துன்புறுத்திய மகள் அவளை அவன் கையில் ஒப்படைப்பதில் நியாயமுண்டோ? 
 
கற்பு என்பதை அவள் இழக்கவில்லை;
ஏனெனில், அவள் உள்ளத்திலே அங்கு கள்ளமில்லை.
 
லட்சோப லட்சங்கள் வார்த்தை கொண்ட என் தாய் தமிழ் மொழியில்,
கற்புக்கு ஆண்பால் வார்த்தை இல்லை.
 
 "கற்பழிப்பு" வார்த்தை வேண்டாம் நமக்கு;
அதை அகராதியிலிருந்து இன்றே அகற்று.
 
 
Chillzee "KNV " தொடரின் நாயகி பிரியா கதாப் பாத்திரம் இக்கவிதைக்கு தூண்டுதல். அது போலவே ஒரு தவறும் செய்யாமலே உடல், மன ரணங்களால் துன்புறும் அனைத்து சகோதரிகள் ,சின்னஞ் சிறு தளிர்கள் அனைவருக்கும் என் கவிதை சமர்ப்பணம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.