அவன் - ஜான்சி
சாளரத்தை திறந்து வைக்க உள்ளே வர பரிதவித்தான்.
ஆவலுடன் வழி விட ஆர்ப்பரித்து எனை மோதிநின்றான்.
பின்னங்கழுத்தில் குறு குறுப்பூட்டி என்னை சிலிர்க்க செய்தான்.
வியர்வையால் ஒட்டியிருந்த என் முன்னுச்சி கேசம்தனை சீர் செய்ய இயலாமல் மிகவும் சலிப்புற்றான்.
மழைத் தூறல் தான் தவிர்க்க நானும் குடை பிடித்திட,அதைக் கண்டு ஒருவேளை கோபம் கொண்டானோ ?!!
குடை தன்னை தன் ஆற்றல் கொண்டே தள்ளி விட்டான். தடுமாறி நின்ற எனை முற்றும் சுழன்றடித்தான்.
பல முறை என்னை திகைப்புற செய்த பின்னர் நான் கோபிக்கும் முன்னாலே கல கலத்து நகைத்திட்டான்.
எந்தன் காற்றுக் காதலன்.