(Reading time: 1 minute)

பயணம் - ஜான்சி

happy and sad

வாழ்க்கையென்னும் பெண்டுலத்தின் பயணியாய் நான்,

இடம் வலமாய் இருதிசைகளிலும் மாறி மாறி பயணிக்க,

கனவுகளின் திசையில் மகிழ்ச்சி, ஆரவாரம் என்று லயிக்கும் முன்னதாக,

ஏமாற்று, பொய்மை, துன்பம் என்னும் நிதர்சனத்தின் மறுமுனைக்கு என்னை ஏந்திச் செல்கின்றது.

ஒரு பக்கம் சார்ந்து மகிழவும் இயலாமல்,

மறுபக்கத்தின் துன்பம் தீர வழியும் தோன்றாமல்,

இருமருங்குமாய் பயணித்தே கடந்துச் செல்கின்றது இந்த வாழ்க்கை.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.