(Reading time: 1 minute)

ம்ஹீம்.....கூடாது "கூடாது" - ஜான்சி

No 

அதெப்படி

அவளுக்கு 

அகவைகள் கூடலாம்??!.

 

இன்றும் தலைச் சாய

அவள் மடி வேண்டும்

 

அதெப்படி 

அவளது 

கரங்கள் சுருங்கலாம்??!!.

 

இன்றும் உணவூட்ட 

அவளே வேண்டும்

 

அதெப்படி

 அவளின்

கண்பார்வை மங்கலாம்??!!.

 

இன்றும் தலைக் கோத

அவளே வேண்டும்.

 

அதெப்படி 

அவளின் கம்பீரம் மங்கலாம்??!!.

 

அவளின் அறிவுரை

என்றுமே வேண்டும்.

 

ம்ஹீம்.....கூடாது "கூடாது"

அவள் அகவை என்றும் "கூடாது"

 

இன்றோ, என்றோ, எப்போதாகினும்

அவள் அன்பை அளந்திட மட்டும் 

 

நம்மால் என்றுமே "கூடாது"

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.