(Reading time: 1 minute)

என் சுவாசம் - சுஜாதா ரவிராஜ்

Baby

உனது மொழி யாவும் நான் 
கேட்க துடிக்கும் இசையாய்....

 

உனது புன்னகையில் எனது 
  நாட்கள் கரைவதாய்...

 

உலக மொழிகள் பலதும்  
 கற்றேன் தினமும் உன்னிடம்...

 

மழலை மொழியில் நீ  கொஞ்ச 
முத்துக்கள் என நான் அதை சேமித்தேன் ...

 

எனது ஜென்மங்களின் தவப்பலன் 
நித்தம் நீ தரும் முத்தம்...

 

இனி வாழும் வாழ்க்கை உனது 
சிரிப்பை காணவே விடியும்...

 

பெண்ணாக நான்  பிறந்ததேன்  என்று 
உனை ஈன்றதில் உணர்ந்தேன் ..

 

என் சுவாசம் அதில் உன் வாசம் 
அதுவே இறைவனின் வர பிரசாதம் ...


Dedicatd to Aaradhya Raviraj

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.