(Reading time: 1 - 2 minutes)

புறப்படு பெண்ணே, சிகரத்தை நோக்கி - ஜெனிட்டா

Kamarajar

மறைந்தாலும் மனதில் வாழும் கல்விச் செம்மல் காமராசருக்கு ஒரு கவிதாஞ்சலி

சரித்திர பக்கங்கள் புரட்ட

தரித்திரனும் தரணி ஆள

வறியவன் வாழ்ந்தோங்க

வந்துதித்தார் விருதுநகரில்!

 

அந்நிய முட்கள்அகற்ற

அண்ணலின் (காந்தி) தாசனாய்

அவனி தளிர்க்க-போர்

பவனி வந்த ஆசன் இவர்!

 

உழைப்பைச் சுரண்டி,

களைப்பை ஏழை பூண்டு,

அடிமை காணும்

முதலாளித்துவ ஏகாதிபத்தியம்

முற்றுப்புள்ளிக்கு முதல்வராய் வந்தவர்!

 

வறுமையின் பிடியில்

வலுவில்லா வறியவர்

வாழ்க்கைக் கல்விக்கு

வித்திட்ட விளை நிலத்தின்

வித்தகர் ராச காமராசர்!

 

கல்வி இல்லா, கல்லூரி காணா

கலங்கரை விளக்கின்

அறிவுச்சுடராய் ஆட்சியுற்ற

அகிலத் தலைவர் இவர் !

 

உயர் தமிழகத்தை

மாநிலங்களும் புகழ,

நாடுகள் நாவால் வாழ்த்த

சரத்திரமும் சாதனை செய்ய

பதவிக்கே பெருமை சேர்த்து

வரலாறு வரவேற்ற

மாவேந்தர் காமராசர் புகழ் வாழ்க! வாழ்க!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.