காதல் - சந்தியா
ஏனடி பொய் சொல்கிறாய்
உன் காதலை நீ
சொன்னதில்லை என்று...
தினமும் உன் கால்
கொழுசு தான் சொல்கிறதே
நீ என்னை காதலிக்கிறாய்
என்று ஓசையிலே....
உன் விழிகள் இரண்டும்
என்னை பார்த்தால்
சொல்கிறதே நீ என்னை
காதலிக்கிறாய் என்று
ஒரு மின்னல் பார்வையிலே....
உன் புடவை முந்தானைக் கூட
சொல்கிறதே உன் காதலை
என்னை தழுவி சென்று....
உன் பாதங்கள் கூட
என் பாத சுவடுகளோடு
இணையாக நடக்கின்றதே
இது சொல்லவில்லையா
உன் காதலை.....
உன் வாய்மொழி சொன்னால்
தான் காதலா....
உன் உயிரின் ஒவ்வொரு
அணுவும் சொல்கிறதடி
உன்னை அறியாமல்
என் மீது நீ கொண்ட
ஆழமான காதலை.....
{kunena_discuss:779}