(Reading time: 1 minute)

நட்சத்திரமாய்... – விம்மிபிரபு

Longing

அமைதியான இரவில் வான் அழகை நான் கண்டிருக்க...

திடீர் என்று கண்சிமிட்டி மின்னும் நட்சத்திரம் போல...

உன் பெயரை எங்கேனும் காணும் பொழுதிலும்...

நீ எழுதும் கவிதை படித்து ரசிக்கையிலும்...

முக நூலில் உன் புகைப்படம் காணும் பொழுதும்...

சிறு புன்னகையோடு கண்சிமிட்டி என் கண்முன் வருகிறாய்...

எனினும் கையில் எட்டா வான் நட்சத்திரம் போல...

தொட முடியா தூரத்தில் நீ...

ஏக்கத்தில் நான்....!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.