(Reading time: 1 - 2 minutes)

வாழ்வு தொடங்குமிடம் நீதானே - ஷக்தீ 

Mother

தணலில் வெந்த காலங்கூட
தணிந்தே போனது உன்
தளிர்முகம் கண்ட பொழுதினிலே;

தன்னை மறந்து சிரித்ததெல்லாம்
தவழ்ந்து வந்தெனும் உன்கரம்
தடவுவதை என் விரல்உணர்ந்தபோது;

எனை நோக்கி இரு பாதங்கள்
எடுத்து வைத்த உன் நடையினிலே
என்னுலகம் சந்தோஷ உச்சியடைந்தது;

கேட்ட வசைமொழிகளும் கூட
காற்றில் கார்பனானது உன்
கீச்சுகுரல் மழலை மொழியில்;

உணராமல் இழந்த இன்பங்கூட
உன்கரம் கோர்த்து நடைபயின்றதில்
உள்ளத்தில் கொண்டுச் சேர்ந்தது

கரு சுமந்ததால் மட்டுமன்று
கண்கள் கண்டிருந்தாலே உன்னுடன்
கணத்தில் தாய்மைஉணர்ந்திருப்பேன்;

உலகமே தாய்மையை போற்றும்;
உன் தாயாகும் வரம் பெற்றதாலே
உன்னை போற்றுவேன் நான்;

தாயன்பு காணா பிஞ்சுகளை
தானாய் நான் அணைப்பதெல்லாம்
தாயாக்கிய நீ தந்த உணர்வு;

கவி முடிக்க எப்போதும் நான்
கடன் வாங்கும் வைர வரிகளை
கவனத்தில் வைக்கிறேன்!!!

வாழ்வு தொடங்குமிடம் நீதானே
வானம் முடியுமிடம் நீதானே

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.