(Reading time: 1 minute)

பிறந்தநாள் பரிசு - ஷக்தீ 

Tears

என் குறும்புகளையும் 
கொண்டாடும் ஒருவன்

என் ஆணவத்திமிரையும்
அங்கிகரிக்கும் ஒருவன்

என் கண்ஜாடைகளில்
காரியமாற்றும் ஒருவன்

என் ரசனைகள் பிடித்தால்
எனை ரசிக்கும் ஒருவன்

என் ரசனைகள் அவனெதிரானால்
எனை கலாய்க்கும் ஒருவன்

என் மேதாவித் தனங்களையும்
மெச்சும் புன்னகையுடன் ஒருவன்

என் கண்மை கசியும்போது
கண் அறியாமலே துடைக்கும் ஒருவன்

எல்லாம் சேர்ந்தவனாய் ஒருவனாய்
என்னவனாய் என்னில் நிஜத்தில்
என்னுடன் இருந்தால் வேறு
என்ன பிறந்தநாள் பரிசு வேண்டும்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.