நட்பு - சரளாதேவி
வானின்
உயரம் காண பறந்த பறவை
சிறக்கொடிந்தது..
ஒடிந்த சிறகில்
மீண்டுவர முயல்கையில்
ஒரு பறவையின் நட்பு…
சிறகோடு சிறகாக ஒன்றிணைந்தது பயணம்
கடந்து வந்த பாதையின் நீளம் தந்தது
இந்நட்புக்கு ஆழம்
கனவுகள் தாங்கிய பறவைகளின் சிறகுகள்
நட்பை சுமந்து பறக்க தொடங்கின
துணையொன்று நுழைந்தது
தோழமை குலைந்தது
துணையின் நிழலில் சிக்கியது நட்பு…
பறவை
கூட்டோடு குடிப்பெயர்ந்தது
நட்பை கிளையிலே விட்டு
{kunena_discuss:779}