(Reading time: 2 - 4 minutes)

இலக்கணப் பிழை - அபிநயா

 

கடவுளால்  இலக்கண  பிழையோடு  எழுதப்பட்ட  காவியங்களாய்  நாங்கள் ...

எங்களை  அவமதிப்பவர்   உண்டு 

அரவணைப்பாரோ  இல்லை.....

 

 காதல்  என்பது  மட்டும் 

கானல்நீர்  ஆகிப்போனது 

காதல்  கனவில்  மட்டுமே  எங்களுக்கு,.  

 

நாங்கள்  உறவை  இழந்தோம் ...

உருவத்தையும்  இழந்தோம்...

உள்ளத்தையும்  இழந்தோம் ..

சில  கயவர்களால்  மனதையும்  இழக்கிறோம்...

எல்லாம்  இழந்தாலும்  அந்த  சிறு  தவறை  ஏற்று .

பெருமைப்பட்டு  கொள்கிறோம் ...

 

நாம்  வாழும்  உலகம்  பெரியது ..ஆனால்...

இவ்வுலகில்  வாழும்  மனிதர்கள் மனமல்ல..

அப்படி  இருந்தால்  இன்றும்  எங்களில்  சிலர் 

பிச்சை  எடுத்து  வாழும்   அளவுக்கு  வந்திருக்க  மாட்டார்கள் ..

ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களை  தவிர ...

 

 கடவுளே  கருணை  மனம்  படைத்தவன்  நீ  என்று  ஏற்று  கொள்கிறேன் ...

ஏன் எனில்  யார்  எங்களை  தவறாக  ஏசினாலும் 

அன்பாக  நடத்தவில்லை  என்றாலும் 

நாங்கள்  பொறுமை  கருணை  என்று  உன்  பிள்ளையாவோ  இருக்கிறோம் ..

 

பிறப்பால் ஆணாய்  ...

வளரும்போது பெண்ணாய்  வளர்ந்தோம்..

காதல்  வயப்படவில்லை  என்றாலும்  

எங்களுக்கும்  நேசம் காதல்  என்ற  உணர்வு  உண்டு...

கரு  சுமக்க  முடியவில்லை  என்றாலும்  சுமக்கிறோம்  பல  சுமைகளை  நாங்கள்...

 

ஒரு  குழந்தைக்கு  தாய் /தந்தை  மிகவும்  பிடிக்கும்  என்றால் 

அந்த இரண்டையும்  எங்கள்  உருவில்  படைத்த 

என்  கடவுள்  தாய்ந்தயை (தாய் /தந்தை )  எண்ணி  வியக்கிறேன் 

நாங்கள்  எவ்வளவு  அதிர்ஷ்டசாலி  என்று  ...

 

இருந்தும்  சிறு  வேதனை 

இன்னும்  எங்களில்   சிலரை  நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை  ..

என்ன  பாவம்  செய்தோம் நாங்கள் 

எங்களை  ஏற்க  பயப்படுகிறீர்கள் 

சில  பல  தவறு  செய்யும்  மனிதருகே  நீதி  மன்றத்தில்  நீதி  உண்டு  ..

எங்களுக்கு  நீதி  எது?? ... 

 

எங்களை  மதிக்க  வேண்டும்  என்று  கேட்கவில்லை 

மிதிக்காதீர்கள்

எங்களின்  சிறிய  ஆசை 

வளர்ந்த  குழந்தையான  நீங்கள்தான்  ஏற்கவில்லை 

ஆனால் உங்கள்  வளரும்  குழந்தையாவது  எங்களை  ஏற்று  கொள்ளட்டும்

அதையும்  கெடுத்து  விடாதீர்கள்

 

எங்களில்  இன்னும்  செய்கிறார்கள்  சாதனைகள்

பல பெற்ற பாராட்டுக்கள்  பல ..

எங்களுக்காக  எதுவும்  செய்ய  வேண்டாம் 

நீங்க  எங்களை  எங்கள் ஆக வாழவிடுங்கள்  அது  போதும் ...   

          

இப்படிக்கு 

ஒரு  தாய்க்கு  மகனாய்  பிறந்து  

உறவுகளால் அவர்களின் வார்த்தையையால்    இறந்து 

கடவுளால்  மறு   பிறவியின்  பெண்ணாய் மாறிய  தெய்வ  மகள் ... 

இனியாவது இவர்களை மதிக்க கற்று கொள்வோம் என உறுதி எடுப்போம்.

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.