(Reading time: 1 minute)

என்னைத் தேடினேன் - ஆர்த்தி R

Searching for Myself

மனம் கொள்ளாச் சிரிப்புடன்

மண்ணில் வாழ்ந்த

என்னைத் தேடினேன்!!

எதிர்காலமெனும் அரக்கனை

நினையாதிருந்த 

என்னைத் தேடினேன்!!

தவறைத் தவறெனச் சொல்லும்

தவறாமையில் தவறாத

என்னைத் தேடினேன்!!

உலகமெனும் மேடையில்

நடித்திடாத 

என்னைத் தேடினேன்!!-ஆம்

என்னில் தொலைத்த 

என்னைத் தேடினேன்!!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.