(Reading time: 1 minute)

மகளதிகாரம் - கிருஷ்ணபாபு

Daughter

கண்ணாடியில் எனக்கு வக்களம்

காட்டியபடி கேட்கிறாள்..

 

தியேட்டரில் மடியில் அமர்ந்து

கொறித்தபடி கேட்கிறாள்..

 

சகியைக் காதலாய் பார்த்தால்

இடுப்பில் கைவைத்தபடி

கிண்டலாய் கேட்கிறாள்..

 

'என்னப்பா மறைக்கிறேனா?'

என்றோ பைக்கில் போகும்போது

தெரியாமல் சொல்லிவிட்டேன்

என் குட்டிப்பெண்ணிடம்..

'கொஞ்சம் குனிஞ்சுக்கோம்மா!

அப்பாக்கு மறைக்குது!'

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.