(Reading time: 1 - 2 minutes)

கவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 01 - முதல் சந்திப்பு - ரேவதிசிவா

பாதுகாப்பாய் உள்ளிருந்து

பக்குவமாய் பல மாதங்கள் கடந்து

பண் இசைத்தே நீ வெளிவந்தாய்...

 

உன் அழுகுரலைக் கேட்டு

உவகையடைந்து

அசதியால் மயக்கமுற்ற

அன்னை! உன்னை நோக்கவில்லையென்ற ஆதங்கத்தில்!

வேகமாய் அரங்கேற்றினாய் உன் கச்சேரியை

மேடை இல்லாமலே...

 

மலர் போன்று இருக்கிறாயென்று

மருத்துவரும் சொல்ல

தரிசிக்கலாமா? என்பவர்களுக்கு

தடையுத்தரவைப் பிறப்பித்துவிட்டு

தற்காப்போடு தூக்கிச் சென்றனர் உன்னை...

 

அழகு தேவதையாய் அவர் கையில் நீயிருக்க

அன்னையிடம் உன் மனம் சென்றிருக்க

காத்திருந்தவர் கையில் தந்தனர் உன்னை...

அத்தருணத்தில் அப்பாவைப் பார்த்து சிரித்தாலும்

அன்னையின் நினைவில்- மீண்டும்

உன் அழுகை

பண்ணிட்டுக் கூட்டியது ஊரை...

 

பசிப் போக்க அன்னையிடம் சேர்ப்பிக்க

காடு மலை தாண்டி

வீடு வந்தவனைப்போல்

அப்பாடா! இப்போழுதேனும் விட்டார்களென்று!

நிம்மதியடைந்த உன்னை

தாய்ப்பாலோடு தாய்மையும் ஊற்றெடுக்க

முதன்முறையாய் உனை கையிலேந்தும் தாய்க்கும்

அவள் ஸ்பரிசம் படும் உனக்கும்

அத்தருணம் மிக அழகியதன்றோ!

The above poem is dedicated to all mothers and infants

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.