(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மனிதர்கள் பலவிதம் - சா செய்யது சுலைஹா நிதா

different-human-faces

உரிமையுடன் பழகுவர் சிலர்

உரிமை இருந்தும் பழக மறுப்பவர் பலர்

 

நிமிடத்திற்கு ஒருமுறை  தன் குணத்தை மாற்றுவோர் சிலர்

வருடங்கள் கடந்தும் மாறா குணமுடையோர் பலர்

 

மனதில் பட்டதை பேசுவோர் சிலர்

மனதில் பட்டாலும் பேச மறுப்பவர் பலர்

 

தன்னலம் கருதாமல் உதவுவர் சிலர்

தன்னலம் கருதி உதவ முன்வராதவர் பலர்

 

தன் பேச்சால் மற்றவரை குணப்படுத்துவர் சிலர்

அதே பேச்சால் மற்றவரை புண்படுத்துவர் பலர்

 

பிறரை அடக்கி வாழ்பவர் சிலர்

பிறரால் அடக்கப்பட்டு வாழ்பவர் பலர்

 

இதுபோல்,

மனிதர்களில் உண்டு பலவிதம்

அதை புரிந்துகொள்ள நமக்கு போதாது ஓர் யுகம்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.