(Reading time: 2 - 4 minutes)

கவிதை - மீண்டும் ஓர் உதயம் - யாசீன்

writing

நாழிகைகள் பல கடந்து 
நாட்களும் உருண்டோட
என் எண்ணங்களிலும் வண்ணங்களிலும் ஏதோ ஓர் மாறுதல்.....
உணரமுடியாத ஆறுதல்....

சட்டென என் கல்லூரி நினைவுகள்.. 
மனக்கண் முன்னே....
நெடுங்காலம் என் கரம் படாது
விலங்கிடப்பட்ட பேனாமுனை ஏக்கமாய் என்னை பார்க்க....
மெய்மறந்து நானும் அளித்தேன் அதற்கு மோற்சனம்....

இதயமும் சிந்தனையும் என்னை மீறிய பொழுதுகள் ....
தனிமையும் இனிமையாய் செல்போனில் கழிந்த நாழிகைகள்...
மீண்டும் என்னுள் ஓர் உதயம்....

என் பேனாமுனை தானாய் கிறுக்களிட....
வெள்ளை தாளெங்கும் கவிதை கோலங்கள்....
புரிந்து கொண்டேன்.... என் பேனா ஆறாம் விரலாய் தஞ்சம் கொள்ளப்போகிறது என்று. ....

அன்று பதிந்து வைத்த என் கிறுக்கல்கள்....
கல்லூரி நாட்களில் தொடர்ந்த 
என் நினைவுகள்....
நானே எனக்கு  ஆயுதலாய்....
இடையிடையே என் செல்லில் பதித்த பதிப்புகள்....
என் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்த சிந்தனைத் துளிகள்..
ஏனோ அழிந்தது தொழில்நுட்ப மாயையினால்....
என் சிந்தை முழுவதும் வெறுமையாய்.........

மழலை போல் பிடிவதம் கொண்டது
உள்ளம்...எழுத மறுத்த விரல்கள்...
வைத்தேன் சிந்தைக்கு முற்றுப்புள்ளி. எல்லாம் முடிந்தது என....

காலம் கடந்த பிறகு ஞானமும் பிறந்தது......
உணர்ந்தேன் நானும்  மடமையை ....
மறைந்தது எனது பிடிவாதம்.....
மாறியது முற்றுப்புள்ளியும் தொடர்புள்ளியாக......
என்னுள் மீண்டும் ஓர் உதயம்....
  
கற்றுத்தந்தது வாழ்க்கை காலவோட்டத்தில் படிப்பினைகளை.....தோல்வி கண்டு துவலாதே நீயும் ...சங்கடங்கள் என்றும் நிரந்தரமில்லை உனக்கு...

விரக்தி  என்றும் வேண்டாம் தோழி...இழப்பாய்  நீயும் உன் பலத்தை....வீண் பிடிவாதம், கோபம் மறைக்கும் உன்  வாய்புகளை...

துமி போன்ற துயரை சமுத்திரமாய்
நீயும் பார்ப்பது ஏன்? 

தட்டிக் கொடு இதயத்தை...

எட்டி உதை தடைகளை...
மறைந்தாலும் சூரியன் உதிக்கிறதே மறுநாள் புதுப்பொலிவுடன்.....

வீழ்ந்தாலும் நதி
ஆகிறது மின்சாரமாய்....

என்னை நினைத்து தலைக்குனிந்தேன் நானும்...
வீணான என் நிமிடங்களை எண்ணி....
மீண்டும் கொண்டேன் பிடிவாதம். ...
விடுவதற்காக அல்ல...
தொடர்வதற்காக. .....
                    
                              பிடிவாதக்காரி !

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.